South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தொடர் மின்வெட்டால் பக்தர்கள் தவிப்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தொடர் மின்வெட்டால் பக்தர்கள் தவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 15ம் தேதி(நாளை மறுதினம்) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தீபத்திருவிழாவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ள நிலையில் திருவண்ணாமலைக்கு வெளிநாட்டு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு பிரச்னை பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே கிரிவலப்பாதையில் உள்ள பெரும்பாலான இடங்களில் மின் விளக்குகள் சரியாக எரிவதில்ைல என்ற புகாரும் உள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கிரிவலப் பாதையின் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு ஏற்பட்டது. அக்னி லிங்கம் பகுதியில் தொடங்கி நிருதி லிங்கம் வரை மின்தடை ஏற்பட்டதால் இருள் சூழ்ந்தது. அதனால், அந்த பகுதியில் கிரிவல பக்தர்கள் அச்சத்துடன் கடந்து சென்றனர். அந்த வழியாக சென்ற வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்திலும், செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்திலும் பயந்து பயந்துகிரிவலம் செல்லும் நிலை காணப்பட்டது. பவுர்ணமி மட்டுமின்றி சமீபகாலமாக அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் கிரிவல பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தற்போது மின்வெட்டு பிரச்னையால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

இதுதொடர்பான வீடியோகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகியுள்ள நிலையிலும் மின் வெட்டு பிரச்னைக்கு நிரந்த தீர்வு காணவில்லை என பக்தர்கள் வேதனைபடுகின்றனர்.

📍 Madurai
📰 Dinakaran Tamil
🕒 11 days ago

Related News

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்: தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்: தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
‘ஆட்சியருக்கே இந்த நிலையா? கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்
‘ஆட்சியருக்கே இந்த நிலையா? கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்
காஞ்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு
காஞ்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு
⬅ Back
➕ Post Ad
To Ads ➡