South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

94 ரன்னில் சுருண்டு ஃபாலோ ஆன் பெற்றது சண்டிகர் தமிழ்நாடு அணிக்கு வெற்றி வாய்ப்பு

94 ரன்னில் சுருண்டு ஃபாலோ ஆன் பெற்றது சண்டிகர் தமிழ்நாடு அணிக்கு வெற்றி வாய்ப்பு

சண்டிகர்: தமிழ்நாடு அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் டி பிரிவு லீக் ஆட்டத்தில், முதல் இன்னிங்சில் 94 ரன்னில் சுருண்டு ஃபாலோ ஆன் பெற்ற சண்டிகர் அணி 2வது இன்னிங்சிலும் 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன் எடுத்து இன்னிங்ஸ் தோல்வியின் பிடியில் சிக்கியது. செக்டார் 16 ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 571 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (154 ஓவர்; பிரதோஷ் 208, அஜித் ராம் 115*).

2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்திருந்த சண்டிகர் அணி, நேற்று முதல் இன்னிங்சில் 94 ரன்னுக்கு சுருண்டு (37.3 ஓவர்) ஃபாலோ ஆன் பெற்றது. தமிழ்நாடு பந்துவீச்சில் சோனு 4, சரவண குமார், சாய் கிஷோர் தலா 2, குர்ஜப்னீத் 1 விக்கெட் வீழ்த்தினர். 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய சண்டிகர், 3ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன் எடுத்துள்ளது (57 ஓவர்). நேஹல் பஜ்னி 26, அர்ஜுன் ஆசாத் 60, கேப்டன் மனன் வோரா 59 ரன் விளாச, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் எடுக்கத் தவறினர். நிகில் ஷர்மா 13, ரோகித் தண்டா 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

கை வசம் 3 விக்கெட் மட்டுமே இருக்க சண்டிகர் அணி இன்னும் 288 ரன் பின்தங்கியுள்ளதால், தமிழ்நாடு இன்னிங்ஸ் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

📍 Tamilnadu
📰 Dinakaran Tamil
🕒 19 days ago

Related News

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்: தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்: தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
‘ஆட்சியருக்கே இந்த நிலையா? கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்
‘ஆட்சியருக்கே இந்த நிலையா? கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்
காஞ்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு
காஞ்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு
⬅ Back
➕ Post Ad
To Ads ➡