South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி..!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி..!!

விருதுநகர்: ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சாப்டூர் வனச்சரகத்தில் புகழ்பெற்ற சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்கள் அமைந்துள்ளன.

இக்கோயில்களுக்கு மலைப் பாதை வழியாக 10 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். இங்கு பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலைக்கோயில் ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால், ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல 6-ஆம் தேதி முதல் நவம்பர் 9-ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

📍 Thiruchirapalli
📰 Dinakaran Tamil
🕒 20 days ago

Related News

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்: தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்: தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
‘ஆட்சியருக்கே இந்த நிலையா? கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்
‘ஆட்சியருக்கே இந்த நிலையா? கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்
காஞ்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு
காஞ்சியில் மாபெரும் அறிவியல் கண்காட்சி சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு
⬅ Back
➕ Post Ad
To Ads ➡