Select Location
All Locations
State
Region
City / District
கெலவரப்பள்ளி அணை பகுதி தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை: இரு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நோட்டீஸ்

கெலவரப்பள்ளி அணை பகுதி தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை: இரு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நோட்டீஸ்

டெல்லி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணை பகுதி தென்பெண்ணை ஆற்றில் மிதக்கும் நச்சு நுரை தொடர்பாக தமிழ்நாடு - கர்நாடகா இரு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரு மாநில மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர்கள் செப். 9இல் ஆஜராக பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. தென்பெண்ணையில் மாசு ஏற்படுவதை தடுக்க இரு மாநிலங்களும் தீர்வுகளை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய மண்டல இயக்குநரும் ஆஜராக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


Dinakaran 16 hours ago
Home Flash News