Select Location
All Locations
State
Region
City / District
முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடந்த டி20 தொடரை இங்கிலாந்து 4-0 என வென்றது. முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்மிங்காமில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி புரூக்கும் செயல்படுகின்றனர். இந்நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்திய அணியின் விவரம் வருமாறு: சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, குர்னூர் பிரார், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரீத் பும்ரா.


Malaimalar 1 day ago
Home Flash News