Select Location
All Locations
State
Region
City / District
தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான வரிசை பட்டியல் வெளியீடு

தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான வரிசை பட்டியல் வெளியீடு

தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களுக்கான வரிசை பட்டியல் வெளியாகி உள்ளது முதல்வர் விஜய் உள்பட 34 அமைச்சர்களுக்கான பதவி மூப்பு பட்டியலை அரசு பொதுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,

முதல்வர் ஜோசப் விஜய். – பொது நிர்வாகம், உள்விருதுகள், காவல் மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகள்.
 அமைச்சர் ஆனந்த்- ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை.
 அமைச்சர் ஆதவ் அர்ஜுனா- பொதுப்பணிகள், விளையாட்டு மேம்பாட்டு துறை.
 அமைச்சர் அருண்ராஜ்- சுகாதாரம், மருத்துவ கல்வி, குடும்ப நலத்துறை
 அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்- வருவாய், பேரிடர் மேலாண்மை துறை.
 அமைச்சர் வெங்கடரமணன்- உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்.
 அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்- எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்.
 அமைச்சர் ராஜ்மோகன்- பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை.

இயற்கை வளம் முதல் வீட்டு வசதி துறை வரை

அமைச்சர் பிரபு- இயற்கை வளத்துறை.
 அமைச்சர் கீர்த்தனா- தொழில்துறை.
 அமைச்சர் விஸ்வநாதன்- உயர்கல்வித்துறை.
 அமைச்சர் ராஜேஷ் குமார்- சுற்றுலாத்துறை.
 அமைச்சர் ஷாஜகான்- சிறுபான்மை நலத்துறை.
 அமைச்சர் வன்னியரசு- சமூக நீதித்துறை.
 அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்- போக்குவரத்து துறை.
 அமைச்சர் ராஜ்குமார்- வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டு துறை.

பிற்படுத்தப்பட்டோர் துறை முதல் உழவர் நலத்துறை வரை

அமைச்சர் சம்பத்குமார்- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை.
 அமைச்சர் விஜய் பாலாஜி- கைத்தறி, ஜவுளி மற்றும் காதித்துறை.
 அமைச்சர் விக்னேஷ்- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை.
 அமைச்சர் தென்னரசு- வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை.
 அமைச்சர் முகமது பர்வேஷ்- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை.
 அமைச்சர் கோவிந்தராஜ்- கூட்டுறவு துறை.
 அமைச்சர் ஜெகதீஸ்வரி- சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை.
 அமைச்சர் வினோத்- வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை.

பால் வளம் முதல் காலநிலை மாற்ற துறை வரை

அமைச்சர் விஜயலட்சுமி- பால் மற்றும் பால்வளத்துறை அமைச்சர்.
 அமைச்சர் சரத்குமார்- மனிதவள மேலாண்மை துறை.
 அமைச்சர் ரமேஷ்- இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை.
 அமைச்சர் மதன் ராஜா- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை.
 அமைச்சர் மரிய வில்சன்- நிதி, திட்டம் மற்றும் மேம்பாட்டு துறை.
 அமைச்சர் ஸ்ரீ நாத்- மீன் வளங்கள் மற்றும் மீனவ நலத்துறை.
 அமைச்சர் கமலி- கால்நடை பராமரிப்புத்துறை.
 அமைச்சர் குமார்- செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை.
 அமைச்சர் ரஞ்சித் குமார்- வனத்துறை.
 அமைச்சர் லோகேஷ் தமிழ் செல்வன்- வணிகவரிகள் மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.
 அமைச்சர் ராஜீவ்- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை

தமிழக அரசின் இந்த அதிகாரப்பூர்வ பதவி மூப்புப் பட்டியலின்படி, அரசு விழாக்களின் போது அமைச்சர்களுக்கான அமர்வு வரிசை, மரபுச் சடங்குகள் மற்றும் முன்னுரிமைகள் ஆகியவை முறைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அமைச்சரவையில் மூப்பு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி முதல்வர் விஜய் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் அமைச்சர் புஸ்சி ஆனந்தும், மூன்றாம் இடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் 4-வது இடத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் உள்ளனர். விஜய் கேபினட்டில் இடம் பெற்றுள்ளவர்களில் மிகவும் மூத்தவராக உள்ள செங்கோட்டையன் 5-வது இடத்தில் தள்ளப்பட்டுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பொறுப்பை அமைச்சர் செங்கோட்டையன் வைத்துள்ளார்.


Smacy News 39 minutes ago
Home Flash News