Select Location
All Locations
State
Region
City / District
16 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சென்னையை சேர்ந்த இளம்பெண் சாதனை

16 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சென்னையை சேர்ந்த இளம்பெண் சாதனை

சென்னை: சென்​னையைச் சேர்ந்த 16 வயதான நிஷா சசிகு​மார், ‘எவரெஸ்ட் சிகரத்​தில் ஏறிய இளம்​பெண்’ என்ற சாதனையைப் படைத்​துள்​ளார். இதுகுறித்து, நிஷா சசிகு​மார் மற்​றும் தந்தை சசிகு​மார் சென்​னை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நானும் என் மகள் நிஷா​வும் இணைந்து உலகத்​தில் உள்ள 7 கண்​டங்​களி​லும் உள்ள 7 உயர்ந்த சிகரங்​களை அடைய வேண்​டும் என்ற நோக்​கோடு பயணத்​தைத் தொடங்கி இருக்​கிறோம்.

மே 25-ம் தேதி உலகின் உயர்ந்த சிகர​மான எவரெஸ்டை அடைந்து இளம்​வய​தில் நிஷா சாதனை படைத்​துள்​ளார். இதற்கு முன்பு நேபாளத்​தைச் சேர்ந்த 16 வயது பெண், 187 நாட்​களில் சிகரத்தை அடைந்த நிலை​யில் 16 வயதுடைய நிஷா, 80 நாட்​களில் இந்த சாதனையை செய்​ததோடு, இந்​தி​யா​வின் முதல் நபர் என்ற கூடு​தல் சிறப்​பை​யும் பெற்​றுள்​ளார். இந்த சாதனை மூல​மாக, நாடுமுழு​வதும் உள்ள பெண் குழந்​தைகள் தங்​களால் எதை​யும் சாதிக்க முடி​யும் என்ற எண்​ணம் உரு​வாக வேண்​டும். இது​வரை ஆப்​பிரிக்க நாட்​டில் உள்ள கிளி​மாஞ்​சா​ரோ, ரஷ்யா​வின் எல்​புரூஸ், ஆஸ்​திரேலிய​வின் கோசி​யாஸ், இந்​தோ​னேஷியா​வின்காஸ்​டன் பிரமிட், அர்​ஜென்​டி​னா​வின் அகன்​காங்கோ சிகரங்​களில் ஏறி சாதனை படைத்​துள்​ளோம்.

அடுத்து வட அமெரிக்கா அலாஸ்​கா​வில் உள்ள டெனாலி மலை​யில் ஏற உள்​ளோம். இது​வரை ஏறிய மலைகளி​லேயே அந்த மலை மிக​வும் கடின​மாக இருக்​கும். அதற்​கான பயிற்​சி​யும் மேற்​கொண்டு இருக்​கிறோம். எவரெஸ்ட் சிகரத்​தில் ஏறு​வது மிக​வும் சவாலாக இருக்​கும் என்​ப​தால் கடந்த ஒரு வருட​மாக பெங்​களூரு, மைசூரு​வில் உள்ள மலைகளில் ஏறி பயிற்சி மேற்​கொண்​டோம். படிப்​பை​யும் விட்​டு​விடக் கூடாது என்​ப​தால் வாரத்​தில் 5 நாட்​கள் பள்​ளி​யிலும் வார இறுதி நாட்​களில் பயிற்​சிக்​காக வெளி மாநிலங்​களி​லும் சென்று பயிற்சி மேற்​கொண்​டோம்.

எவரெஸ்ட் சிகரம் உள்​ளிட்ட மலைகளில் ஏறியது தொடர்​பாக தமிழக அரசுக்கு தெரி​வித்​திருக்​கிறோம். தமிழக அரசு சார்​பில் எங்​களுக்கு பாராட்டு தெரி​வித்​துள்​ளனர். இளம் வயதில் 7 கண்​டங்​களி​லும் உள்ள மலை உச்​சிகளில் ஏறி சாதனை படைக்கவேண்​டும் என்ற பயணத்தை நவம்​பர் மாதத்​தில் முடிக்க இருக்​கிறோம். இதன்​மூலம் உலகில் மிக இளம் வயதில் அனைத்து சிகரங்​களை​யும் கடந்த இளம் பெண் என்ற சாதனையை படைப்​போம். இவ்​வாறு அவர்​கள் கூறினர்


Hindu Tamil 1 hour ago
Home Flash News