தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக இருக்கும் ஜோசப் விஜய், நடிகராக இருந்தபோது கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். இந்தப் படம் சொல்லப்பட்ட ரிலீஸ் செய்தியை தாண்டி வெளியாகாமல் இருக்கும் நிலையில், படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பது குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
தனது தமிழக வெற்றிக்கழகம் கட்சியை ஆரம்பித்த இரண்டு வருடத்திலேயே ஆட்சியைப் பிடித்த முதலமைச்சராக இருக்கிறார் சி.ஜோசப் விஜய். இவர், கிட்டத்தட்ட 30 வருடங்களாக தமிழ் திரை உலகில் டாப் ஹீரோவாக இருந்தார். அவர் திடீரென்று சினிமாவை விட்டு விலகப் போகிறேன் என்று சொன்னது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் கடைசியாக ஒரு படத்தில் நடிக்கிறார் என்று ரசிகர்கள் தங்களை தாங்களே ஆறுதல் படுத்திக் கொண்டனர். ஆனால் ஆறுதலாக அந்த படம் தியேட்டர் ரிலீஸ் ஆவதிலும் தொடர்ந்து பிரச்சினை எழுந்து கொண்டே இருந்தது.
LIVE