Select Location
All Locations
State
Region
City / District
/சென்னை அருகே தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.

சென்னை: மணலி புதுநகர் அருகே விச்சூரில் உள்ள பழைய எண்ணெய் பொருட்கள் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் இருந்த எண்ணெய் பீப்பாய்கள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ பரவியதை தொடர்ந்து ஊழியர்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியேறினர்.

குடோனில் பாய்லர்கள் வெடித்து தீ கொழுந்துவிட்டு எரிவதால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது. பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதால் ஊழியர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். திருவொற்றியூர், மாதவரம் மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


Dinakaran 1 hour ago
Home Flash News