Select Location
All Locations
State
Region
City / District
நீட் தேர்வு நடக்கும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை

நீட் தேர்வு நடக்கும் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை

மதுரை: நாடு முழுவதும் அரசு மருத்துவமனை கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகளுக்கு நாளை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்காமல் முதல் முறையாக கட்டாய வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி, முறைகேடுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவே, தேசிய மருத்துவக் கவுன்சில் நிர்வாகம், இந்த ஏற்பட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய தேர்வு முகமை (NTA) அறிவிப்பின்படி, மருத்துவப் படிப்புக்கான (எம்பிபிஎஸ்) 2026-ம் ஆண்டுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு நாளை மே 3 (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் 552 நகரங்களில், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வை, 22 லட்சத்து 79 ஆயிரத்து 743 மாணவர்கள் எழுத உள்ளனர். மதுரை மாவட்டத்தில் 16 மையங்களில் 8,578 மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணிக்குள் மாணவர்கள் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

நீட்’ தேர்வு நடைபெறும் நாளை ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைக் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்காமல் கட்டாய வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் வடமாநிலங்களில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள், ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்ந்து, தேசிய மருத்துவக் கவுன்சில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் கூறியது: ‘மூட்டைக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையாக, நீட் தேர்வு முறைகேடுகளை தடுக்க, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

‘நீட்’தேர்வில் பங்கேற்கும் மாணவர்களை, காதில் கம்மல் அணியக் கூடாது, செல்ஃபோன் உள்ளிட்ட தடை விதிக்கப்பட்ட எந்த பொருட்களையும் தேர்வு மையத்துக்கு எடுத்து செல்லக் கூடாது என்று மிக கடுமையான சோதனைகள், கட்டுப்பாடுகளுடனேதான் அனுமதிக்கப்படுகின்றனர்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News