Select Location
All Locations
State
Region
City / District
காரைக்குடியில் விஜய் பிரச்சாரம்: காவல்துறை விதித்த முக்கிய கட்டுப்பாடுகள்..

காரைக்குடியில் விஜய் பிரச்சாரம்: காவல்துறை விதித்த முக்கிய கட்டுப்பாடுகள்..

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் காரைக்குடியில் உள்ள கண்ணதாசன் மணிமண்டபம் முன்பு, தேவர் சிலை அருகிலுள்ள நான்கு சாலை சந்திப்பு பகுதியில் நடைபெற உள்ளது.பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விஜய் பரப்புரை செய்யுள்ள காரைக்குடி தொகுதியில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாங்குடியும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் போட்டியிடுகின்றனர். தவெக சார்பாக மருத்துவர் பிரபு போட்டியிடுகிறார்.

காவல்துறை விதித்த முக்கிய கட்டுப்பாடுகள்

விஜய் எந்த வழியாக வருகிறாரோ அதே வழியாகவே திரும்பிச் செல்ல வேண்டும்
 பரப்புரையை 12 முதல் 2.30 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும்
 ஒலிப்பெருக்கி பயன்படுத்த கூடாது பிரச்சாரத்தின் போது 20 மருத்துவர்கள் கொண்ட அவசர சிகிச்சை குழு கட்டாயமாக இருக்க வேண்டும்
 200 வாலண்டியர்கள் வாக்கி-டாக்கி வசதியுடன் பணியில் ஈடுபட வேண்டும்.
 இருசக்கர வாகனங்களில் விஜய் பிரச்சார வாகனத்தை பின்தொடரக் கூடாது
 வாகன நிறுத்தத்திற்காக 5 கார் பார்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
 18 வயதிற்குட்பட்டவர்கள் பரப்புரையில் கலந்துகொள்ள கூடாது 
உள்ளிட்ட நிபந்தனைகள் இருக்க வேண்டும்.


Smacy News 19 days ago
Home Flash News