... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#சாத்தான்குளம் வழக்கு : நீதிமன்றத் தீர்ப்புக்கு ஜவாஹிருல்லா வரவேற்பு!

சாத்தான்குளம் வழக்கு : நீதிமன்றத் தீர்ப்புக்கு ஜவாஹிருல்லா வரவேற்பு!

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை வழக்கில் காவல்துறையினருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் மு.ஹி. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சிக்காலத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் படுகொலை வழக்கில் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. காவல் நிலைய கொலை வழக்கில் ஈடுபட்ட 9 காவலர்களுக்கும் இரட்டை மரண தண்டனை வழங்கியதோடு காவலர்களிடம் இருந்து அபராதம் வசூலித்துப் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருப்பது நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதி செய்வதாக அமைகிறது.

காவல்துறையினருக்கு ஆயுள் தண்டனை அச்சத்தைத் தராது எனவே மரண தண்டனை வழங்குவதுதான் சிறந்தது என்று நீதிபதி முத்துக்குமரன் கூறி இருப்பது கவனம் பெறுகிறது. எதிர்காலத்தில் இது போன்ற காவல்துறை சித்திரவதைகள் நடைபெறாத வண்ணம் இருப்பதற்கு இந்த தீர்ப்பு முன்மாதிரியாக அமைந்துள்ளது. சிறப்பான தீர்ப்பினை பெற்றுத் தந்த வழக்கறிஞர் குழுவினருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.

Source : Nakkeeran

1 hour ago

Home Flash News