“தவெக தலைவர் விஜய், விஜயகாந்த் போல தாக்கத்தை ஏற்படுத்துவார்”– டிடிவி தினகரன் பேட்டி!
தவெகால் பாதிப்பு என்பது ஆளுங்கட்சிக்கே ஏற்படும் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “விஜய், விஜயகாந்த் போல தாக்கத்தை ஏற்படுத்துவார். திமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவார். ஏற்கனவே மக்கள் திமுக ஆட்சியில் குமுறிக் கொண்டுள்ளார்கள். எனவே எல்லாமே இத்தேர்தலில் எதிரொலிக்கும். அண்ணாமலை என்னிடம் பேசிய போது நான் போட்டியிடவில்லை என கூறினார். தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன் என கூறினார். நான் தேர்தலில் நிற்கவில்லை என்பதால் தொண்டர்கள் வருத்தப்பட்டார்கள்.
தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் அமைச்சர்கள் வாய்ப்பு குறித்த கேள்விக்கு, “அதிமுக ஆட்சி வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். தேசிய ஜனநாயக கூட்டணியில் வர வேண்டும் என விரும்புவது இயற்கை. தேர்தலுக்கு பிறகு சுமூகமாக எல்லாம் மாறும். தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமைந்திருந்தால் பாதிப்பு இருந்திருக்கும். தற்போது தவெகால் பாதிப்பு என்பது ஆளுங்கட்சிக்கே ஏற்படும். அதனால் தான் கூடுதல் தொகுதிகளில் திமுக நிற்கிறது” என்று தெரிவித்துள்ளார்.