... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அப்டேட் : பெண்களே இந்த தவறை செய்துவிடாதீர்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அப்டேட் : பெண்களே இந்த தவறை செய்துவிடாதீர்கள்

தமிழ்நாடு அரசு திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் 1.31 கோடி பெண்கள் பயனாளிகளாக இருக்கின்றனர். அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவு வைத்தது தமிழ்நாடு அரசு. இப்போது தேர்தல் என்பதால் இத்திட்டம் செயல்பாட்டில் இல்லை.

இருப்பினும் தேர்தலுக்குப் பிறகு புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் அரசு இத்திட்டத்தை தொடர்ச்சியாக செயல்படுத்தும். அதுவும் தேர்தலுக்குப் பிறகு இந்த தொகை ஆட்சிப் பொறுக்கும் அரசைப் பொறுத்து கூடுதலாக கிடைக்க உள்ளது. திமுக, அதிமுக என எந்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் இத்திட்டம் மூலம் பெண்களுக்கு மாதம் மாதம் கொடுக்கப்படும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது உறுதி.

ஆனால், இத்திட்டத்தில் பயனாளியாக இருக்க தமிழ்நாட்டு பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விதிமுறைகள் இருக்கின்றன. மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு அடிப்படை ஆவணமே ரேஷன் கார்டு தான்.

அந்த கார்டு செயல்பாட்டில் இருப்பது அவசியம். ஒருவேளை ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டாலோ, முடக்கப்பட்டலோ மகளிர் உரிமைத்தொகை போன்ற எந்த மக்கள் நலத்திட்டங்களுக்கும் கிடைக்கவே கிடைக்காது.

ரேஷன் கார்டு முடக்கப்படுவதற்கு சில காரணங்கள் இருக்கிறது. ரேஷன் பொருட்கள் தொடர்ச்சியாக மாதம் மாதம் தவறாமல் வாங்க வேண்டும். மூன்று மாதங்களுக்கும் மேல் ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருந்தால் உங்கள் கார்டு முடக்கி வைக்கப்படும். அதன்பிறகு அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்தபிறகே கார்டு ஆக்டிவேட் செய்யப்படும்.

ரேஷன் கடையில் வாங்கும் பொருட்களை வெளியில் எங்கும் விற்பனை செய்யக்கூடாது. அரிசி, சர்க்கரை, எண்ணெய், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எந்த பொருட்களையும் வெளியில் விற்பனை செய்யக்கூடாது. இது சட்டப்படி குற்றம்.

Source : Zee News Tamil

1 hour ago

Home Flash News