... SMACY
Home Flash News {"Tamil Nadu":"Ariyalur,Chengalpattu,Chennai,Coimbatore,Cuddalore,Dharmapuri,Dindigul,Erode,Kallakurichi,Kanchipuram,Kanyakumari,Karur,Krishnagiri,Madurai,Mayiladuthurai,Nagapattinam,Nilgiris,Namakkal,Perambalur,Pudukkottai,Ramanathapuram,Ranipet,Salem,Sivaganga,Tenkasi,Tirupur,Tiruchirappalli,Theni,Tirunelveli,Thanjavur,Thoothukudi,Tirupattur,Tiruvallur,Tiruvarur,Tiruvannamalai,Vellore,Viluppuram,Virudhunagar","Kerala ":"Alappuzha,Ernakulam,Idukki,Kannur,Kasargod,Kollam,Kottayam,Kozhikode,Malappuram,Palakkad,Pathanamthitta,Thiruvananthapuram,Thrissur,Wayanad ","Pondichery":"Karaikal,Mahe,Puduchery,Yanam","Karnataka":"Bagalkot,Ballari,Belagavi,BengaluruRural,BengaluruUrban,Bidar,Chamarajanagar,Chikkaballapur,Chikkamagaluru,Chitradurga,DakshinaKannada,Davanagere,Dharwad,Gadag,Hassan,Haveri,Kalaburagi,Kodagu,Kolar,Koppal,Mandya,Mysuru,Raichur,Ramanagara,Shivamogga,Tumakuru,Udupi,UttaraKannada,Vijayanagara,Vijayapura,Yadgir","Andhra Pradesh":"AlluriSitharamaRaju,Anakapalli,Ananthapuram,Annamayya,Bapatla,Chittoor,EastGodavari,Eluru,Guntur,Kakinada,KonaSeema,Krishna,Kurnool,Manyam,Nandyal,NTR,Palnadu,Prakasam,SPSNellore,SriSatyasai,Thirupathi,Srikakulam,Vishakhapatnam,Vizianagaram,WestGodavari,YSRKadapa","Telangana":"Adilabad,BhadradriKothagudem,Hanumakonda,Hyderabad,Jagtial,Jangaon,JayashankarBhupalpally,JogulambaGadwal,Kamareddy,Karimnagar,Khammam,KumuramBheemAsifabad,Mahabubabad,Mahabubnagar,Mancherial,Medak,MedchalMalkajgiri,Mulugu,Nagarkurnool,Nalgonda,Narayanpet,Nirmal,Nizamabad,Peddapalli,RajannaSircilla,Rangareddy,Sangareddy,Siddipet,Suryapet,Vikarabad,Wanaparthy,Warangal,YadadriBhuvanagiri"} Login
#கட்டணத்தை உயர்த்திய Zomato

கட்டணத்தை உயர்த்திய Zomato

Zomato Hikes Platform Fee : Zomato நிறுவனம், ஒரு ஆர்டரின் விலையை பயனர்களிடம் வசூலிக்கும் தளக் கட்டணத்தை ஒரு ஆர்டருக்கு ரூ. 2.40 உயர்த்தியுள்ளதாக, அந்த செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை எதிர்பாராத ஊழியர்கள் பயங்கர ஷாக்கில் உள்ளனர்.

கடந்த 10 வருடங்களில், ஆன்லைன் மூலமாகவே வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதும், ஆன்லைனில் உணவு வாங்குவதும் அதிகரித்து இருக்கிறது. இதில் இந்தியாவில் முன்னோடியாக சில தளங்களே இருக்கின்றன. அவற்றில் ஒன்று, Zomato. இதை, பல லட்சம் பயனர்கள் உள்ளனர். சாதாரணமாக, ஒரு உணவை கடைக்கு சென்று வாங்கும் போது இருக்கும் விலையை விட, இதில் அதிகமாகவே இருக்கும். காரணம், இதில் டெலிவரி சார்ஜஸ்-ம் சேர்க்கப்படும். ஏற்கனவே பல முறை Zomato நிறுவனம் கட்டணங்களை உயர்த்தியதை அடுத்து இப்போது இன்னொரு கட்டண உயர்வும் அமலுக்கு வருகிறது.

கட்டணத்தை உயர்த்திய Zomato:

 முன்னதாக, GST இல்லாமல் Zomato தங்களின் ப்ளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தி இருந்தது. இதன் விலை ரூ.12.50 ஆக இருந்தது. இப்போது ரூ2.40-வை இதில் சேர்த்துள்ளது. இந்த நிலையில், இப்போது தள கட்டணம் 14.90 ஆக இருக்கிறது.கடைசியாக 2025ல் Zomato கட்டணத்தை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. Zomatoவின் போட்டி நிறுவனமான இன்னொரு ஆன்லைன் டெலிவரி ஆப் ஆக இருக்கிறது Swiggy. இதில், ஒரு ஆர்டருக்கு தள கட்டணம் ரூ.14.99 ஆக இருக்கிறது. இப்போது கிட்டத்தட்ட இந்த இரு நிறுவனங்களுமே ஒரே மாதிரியான கட்டணத்தைதான் தங்களின் தளத்திற்கு நியமித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் 3ஆம் தேதி, பைக் மற்றும் ஆட்டோக்கள் புக் செய்யும் தளமான ரேப்பிடோ, Ownly என்கிற செயலியை தொடங்கியது. இதில் விற்பனையின் சதவீதத்திற்கு பதிலாக, உணவகங்களிடமிருந்து ஒரு நிலையான கட்டணத்தை வசூலிக்கும் கமிஷன் இல்லாத ‘உணவகத்திற்கு முன்னுரிமை’ என்கிற மாடலில் இது செயல்படுகிறது. பெங்களூருவில் மட்டும் இயங்கும் இந்த ஆப், பிற ஆன்லைன் உணவு ஆர்டர் செயலிகளை விட பயணர்களுக்கு 15 சதவீதம் குறைவான கட்டணத்தில் உணவினை வழங்குகிறது. இது, விற்பவர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் உதவும் வகையில் வெளிப்படைத்தன்மை கொண்ட செயலியாக இருக்கிறது.

 இதன் காரணமாகத்தான், தற்போது Zomato தங்கள் தளத்தின் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக கூறுகின்றனர். இருப்பினும் இது குறித்த நிலையான தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Zomato நிறுவனம் platform கட்டணத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல் இன்னும் சில கட்டணங்களையும் பரிசோதித்து வந்தது. மோசமான வானிலையின் போதும் அதிக மழை பெய்யும் போதும் அதிக கட்டணமானது வசூலிக்கப்படுகிறது. அதே சமய்த்தில், சில இடங்களில் மட்டும் VIP Mode என்கிற பெயரில், வேகமான டெலிவரி மற்றும் முன்னிரிமை கொடுக்கும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

Source : Zee News Tamil

1 hour ago

Home Flash News