2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு
அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவி பேராசிரியர்கள் நிரந்தரமாக நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் வெளியிட்டுள்ளார். அதில், உயர்கல்வியில் தமிழ்நாடு என்றென்றும் முதன்மை இடத்தில் திகழ பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர்கள் நிரந்தரமாக நிரப்பப்படுவார்கள்.