கோவை ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 30 கி.மீ வேகத்துக்கு அதிகமாக சென்றால் வழக்கு: காவல் ஆணையர்
கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கோவை அவிநாசி சாலையில், புதிதாக திறக்கப்பட்டு உள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலம் தொடங்கும் இடமான உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேம்பாலத்தை விட்டு கீழே இறங்கும் வாகன ஓட்டிகளுக்கு எப்படி செல்வது என்ற வழி தெரியவில்லை. அத்துடன் மேம் பாலத்தில் செல்ல பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறார்கள். இதுதான் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் ஆகும். உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் சிக்னல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.