South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

500 பாகிஸ்தான் இந்துக்கள் இந்திய குடியுரிமை கோரிக்கை!

500 பாகிஸ்தான் இந்துக்கள் இந்திய குடியுரிமை கோரிக்கை!

லக்னோ: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த 500 இந்துக்கள், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் குண்டாவில் நடைபெற்ற ஸ்ரீ ராம் கதா மகோத்சவத்தில் ராஜஸ்தானின் ஜோத்பூர் முகாமில் வசிக்கும் 500 பாகிஸ்தான் இந்துக்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை குண்டா தொகுதி எம்எல்ஏ ராஜா பையா ஏற்பாடு செய்திருந்தார். விழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 500 பேரும் 10 பேருந்துகளில் ஜோத்பூருக்குத் திரும்பினர்.

இதுகுறித்து ஹீராலால் கூறுகையில், 2018-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து வெளியேறி ஜோத்பூரில் தஞ்சமடைந்ததாகவும், இதுவரை இந்திய குடியுரிமை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், குடியுரிமைச் சட்டத்தின் கீழ் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்

📍 Pondichery
📰 Hindu Tamil
🕒 1 day ago

Related News

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்: தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்: தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
அலுவலக கணினிகளில் ‘வாட்ஸ்அப் வெப்’ பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
அலுவலக கணினிகளில் ‘வாட்ஸ்அப் வெப்’ பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரான ட்ரோனை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரான ட்ரோனை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
⬅ Back
➕ Post Ad
To Ads ➡