South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

அலுவலக கணினிகளில் ‘வாட்ஸ்அப் வெப்’ பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

அலுவலக கணினிகளில் ‘வாட்ஸ்அப் வெப்’ பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: அலுவலக மற்றும் பொதுக் கணினிகளில் ‘வாட்ஸ்அப் வெப்’ பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ்அப் தளத்தில் இருந்து முறையாக ‘லாக் அவுட்’ செய்யாமல் விடுவதால், தனிப்பட்ட உரையாடல்கள் திருடப்பட்டு பணமோசடி உள்ளிட்ட குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலில் உள்ள வாட்ஸ்அப் வெப் இணைய இணைப்பு மூலம், அனுமதியற்ற நபர்கள் செய்திகள், தொடர்பு எண்கள், குழு உரையாடல்களைப் பார்க்க முடியும். கணக்கு உரிமையாளர்போல நடித்துச் செய்திகளை அனுப்பி, மோசடி, ஃபிஷிங் போன்ற குற்றங்களிலும் ஈடுபட முடியும். பிரவுசர் விண்டோவையோ இணையப் பக்கத்தையோ மூடினால் மட்டும் இணைய இணைப்பு முடிந்துவிடாது. ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் நாமே நேரடியாக லாக் அவுட் செய்ய வேண்டும் என அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அலுவலகம், பகிரப்பட்ட அல்லது பொதுக் கணினிகளில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சைபர் கஃபே, பொது இடங்கள், ஹோட்டல்கள் அல்லது மற்றவர்களின் கணினிகளில் உள்நுழைவதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாவிட்டால், ரகசிய (இன்காக்னிட்டோ) முறையில் பயன்படுத்த வேண்டும்.

அரசு, நிறுவனம், பணம் மற்றும் ரகசியத் தகவல்களை வாட்ஸ்அப் வெப் மூலம் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். தாம் அனுப்பாத செய்திகள் செல்வது அல்லது தொடர்பில் உள்ளவர்களிடம் இருந்து வழக்கத்துக்கு மாறான பதில்கள் வருவது போன்றவை கணக்கு திருடப்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

மேலும், கருவிகள், பிரவுசர்கள் மற்றும் பாதுகாப்பு மென்பொருள்களைப் புதுப்பித்து வைக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய பதிவிறக்கங்கள், தெரியாத கோப்புகள் மற்றும் ‘கிராக்’ செய்யப்பட்ட மென்பொருள்களையும் தவிர்க்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

📍 pondychery
📰 Hindu Tamil
🕒 6 hrs ago

Related News

பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்: தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம்: தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரான ட்ரோனை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரான ட்ரோனை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
சக்திவாய்ந்த தலைவர்களில் மோடிக்கு 2-ம் இடம்: லோவி இன்ஸ்டிடியூட் ஆய்வறிக்கையில் தகவல்
சக்திவாய்ந்த தலைவர்களில் மோடிக்கு 2-ம் இடம்: லோவி இன்ஸ்டிடியூட் ஆய்வறிக்கையில் தகவல்
⬅ Back
➕ Post Ad
To Ads ➡