South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சீராய்வு மனு: தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சீராய்வு மனு: தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்

திருப்பூர்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இடைக்கால உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்துள்ள தமிழக அரசுக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக திமுக, விசிக, முஸ்லிம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கருத்து தெரிவித்தன. கடந்த திமுக ஆட்சியின்போது, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பை மதிக்காமல் சர்வாதிகார ஆட்சி செய்து, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கினர். இதனால், மக்களின் நம்பிக்கையை மட்டுமின்றி, ஆட்சியையும் இழந்தனர்.

சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று கூறினார். இந்நிலையில் சீராய்வு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக முதல்வர் விஜய்யை செயல்பட வைப்பது முருக பக்தர்களுக்கு இழைக்கும் துரோகமாகும்.

இடைக்கால உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்தது கண்டிக்கத்தக்கது. முருகனின் அருளால் தவெகவின் தீய எண்ணம் பலிக்காது. சட்டம் மற்றும் ஜனநாயக வழியில் இந்து முன்னணி போராட்டத்தை துணிந்து நடத்தும். இந்த விவகாரத்தில் தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் போராட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

📍 pondichery
📰 Hindu Tamil
🕒 12 hrs ago

Related News

நாட்டின மாடு வளர்க்கும் 5,000 பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!
நாட்டின மாடு வளர்க்கும் 5,000 பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!
ஆய்வக பரிசோதனையில் அம்பலம் பிஸ்லெரி குடிநீர் பாதுகாப்பற்றது: நடவடிக்கை எடுக்க எப்எஸ்எஸ்ஏஐ முடிவு
ஆய்வக பரிசோதனையில் அம்பலம் பிஸ்லெரி குடிநீர் பாதுகாப்பற்றது: நடவடிக்கை எடுக்க எப்எஸ்எஸ்ஏஐ முடிவு
500 பாகிஸ்தான் இந்துக்கள் இந்திய குடியுரிமை கோரிக்கை!
500 பாகிஸ்தான் இந்துக்கள் இந்திய குடியுரிமை கோரிக்கை!
⬅ Back
➕ Post Ad
To Ads ➡