South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

விமர்சனங்கள் ஏற்பு - ‘ராமாயணா’ படத்தின் புது டிரெய்லர் வெளியானது!

விமர்சனங்கள் ஏற்பு - ‘ராமாயணா’ படத்தின் புது டிரெய்லர் வெளியானது!

பாலிவுட்டில் பிரம்மாண்ட பொருட் செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் படம் ‘ராமாயணா’. இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரிக்க நிதேஷ் திவாரி இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட ரூ.800 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் கே.ஜி.எஃப் யஷ் ராவணனாகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கிறார்கள். மேலும் சன்னி தியோல் அனுமான் கதாபாத்திரத்திலும் ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பனகை கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஆஸ்கர் விருதுகள் வென்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹன்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றனர். இப்படத்தின் முதல் பாகம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் வட இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் உள்ளிட்ட காட்சிகள் எதிர்பார்த்த அளவு இல்லாததாக விமர்சனங்கள் எழுந்தது.

இந்த நிலையில் தற்போது புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் சற்று மெருகேற்றப்பட்டுள்ளது. முதலில் ராவணன் கதாபாத்திரம் அறிமுகம் செய்ய பின்பு ராமர் கதாபாத்திரம் அறிமுகமாகிறது. பின்பு அனைவருக்கும் தெரிந்தது போல் இருவருக்குமான மோதல் காட்சிகள் பிரம்மாண்டமாக இடம் பெற்றுள்ளது. இந்த டிரெய்லர் தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.

📍 Pondicherry
📰 Nakkheeran
🕒 37 days ago

Related News

’ஈரான் விவகாரத்தில் அவசரப்படமாட்டேன்’; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி
’ஈரான் விவகாரத்தில் அவசரப்படமாட்டேன்’; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி
’அமைச்சர் விஜய் பார்த்திபனிடம் `உன் வேலையை பார்த்துட்டு போ' என்றேன்; மெய்காப்பாளன் வேலையை.!’ – வைகோ
’அமைச்சர் விஜய் பார்த்திபனிடம் `உன் வேலையை பார்த்துட்டு போ' என்றேன்; மெய்காப்பாளன் வேலையை.!’ – வைகோ
அடுத்த 25 நாட்களில் 52 லட்சம் திருமணங்கள்: நாடு முழுவதும் ரூ.7.5 லட்சம் கோடிக்கு வர்த்தகம்
அடுத்த 25 நாட்களில் 52 லட்சம் திருமணங்கள்: நாடு முழுவதும் ரூ.7.5 லட்சம் கோடிக்கு வர்த்தகம்
⬅ Back
➕ Post Ad
To Ads ➡