’அமைச்சர் விஜய் பார்த்திபனிடம் `உன் வேலையை பார்த்துட்டு போ' என்றேன்; மெய்காப்பாளன் வேலையை.!’ – வைகோ
"விஜய் பார்த்திபன் அமைச்சரா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. தேவையில்லாமல் ஒரு ஆள் பின்னே இழுத்தார். உன் வேலையை பார்த்துட்டு போ என்று நான் கூறினேன், நான் யாரையும் திட்டவில்லை"
கோவை டாடாபாத் பகுதியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ”விஜய் பார்த்திபன் அமைச்சரா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. முதல்வரை ஒழுங்குபடுத்தி அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். அவர் மீது ஒரு துரும்பு கூட விழக்கூடாது என்று அழைத்துச் சென்று கொண்டிருந்தேன்.
நான் கொடுக்கின்ற பாதுகாப்பு 100 பேர் கூட கொடுக்க முடியாது. கலைஞருக்கே பாதுகாப்பு கொடுத்தவன் நான். தேவையில்லாமல் ஒரு ஆள் பின்னே இழுத்தார். உன் வேலையை பார்த்துட்டு போ என்று நான் கூறினேன், நான் யாரையும் திட்டவில்லை. முதலமைச்சர் என்னை அழைத்ததால்தான் நான் அவருடனே சென்றேன். இதை சகித்துக் கொள்ள முடியாத தி.மு.க வட்டாரத்தினர் அதற்கு எதிராக பேசுகிறார்கள்.
கூட்டத்தில் முதலமைச்சரையே தள்ளி விடுவது போல் இரண்டு பேர் வந்தால் மெய்காப்பாளன் வேலையை நான் செய்வேன், முதலமைச்சரை அவர்கள் தள்ளி விடுவார்கள் என்றால் நானே அவர்களை தள்ளிவிட்டு விடுவேன். வாஜ்பாய்க்கும், கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் கூட பாதுகாப்பாளராக இருந்துள்ளேன். செய்தியாளர்கள் எல்லாம் திட்டமிட்டு தி.மு.க-வின் ஏஜெண்டுகளாக வந்துள்ளீர்கள்.
தி.மு.க-வை தலைமேல் தூக்கி வைத்த தலைவர்களில் என்னை விட வேறு யாரும் இல்லை. வடிவேலுவின் வாழ்வை நாசமாகியவர்கள் திமுகவினர். என்னை வடிவேலு என்று கூறுவது பொருத்தமானதுதான். ஏனென்றால் அவரையும் நம்பி அழைத்து வந்து தெருவில் விட்டு விட்டார்கள், அதேபோன்றுதான் என்னையும் செய்து விட்டார்கள்