South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

புதிய தலைமைச் செயலகம் கட்ட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

புதிய தலைமைச் செயலகம் கட்ட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: சென்னை பட்​டினப்​பாக்​கம் கடற்​கரையையொட்​டிய பகு​தி​யில் தமிழக அரசின் புதிய தலை​மைச் செயல​கம் அமைப்​ப​தற்​காகப் பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணையை ரத்து செய்​யக் கோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்​வலர் கே.கே.ரமேஷ் என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​துள்​ளார்.

வழக்​கறிஞர் ஜெய்​சுகின் மூலம் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள அந்த மனு​வில், சென்​னை​யில் பட்​டினப்​பாக்​கம் கடற்​கரையையொட்டி 25 ஏக்​கர் நிலப்​பரப்​பில் புதிய தலை​மைச் செயல​கம் அமைப்​ப​தற்​குத் தமிழக அரசு பிறப்​பித்த அரசாணை​க்கு தடை விதிக்க வேண்​டுமென வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது.

தமிழக அரசு 10.98 லட்​சம் கோடி ரூபாய் கடன் சுமை​யில் உள்ள நிலை​யில், தமிழகத்​தில் தற்​போது பொருளா​தார வளர்ச்சி இல்​லாத சூழலில், வேலை​வாய்ப்பு உள்​ளிட்ட அத்​தி​யா​வசி​யப் பிரச்​சினை​கள் இருக்​கும்​போதும் 1200 கோடி ரூபாய் செல​வில் புதிய தலை​மைச் செயல​கம் அமைப்​பது மாநிலத்​தின் நிதி நிலை​யைக் கடுமை​யாகப் பாதிப்​ப​தோடு, தமிழகம் மீண்​டும் மீண்​டும் கடனில் மூழ்​கும் சூழலை ஏற்​படுத்​தும் எனக் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

மேலும், தலை​மைச் செயல​கம் கட்​டு​வதற்கு திட்​ட​மிடப்​பட்​டுள்ள பட்​டினப்​பாக்​கம் பகுதி அரிய வகை ஆமை​கள் வழக்​க​மாக முட்​டை​யிட்டு இனப்​பெருக்​கம் செய்​யும் சுற்றுச்​சூழல் உணர்​திறன் மண்டல பகு​தி​யாகும். இத்​தகைய மண்​டலத்​தில் பிரம்​மாண்​ட​மான கான்க்​ரீட் கட்​டு​மானங்​களை மேற்​கொள்​வது கடல்​சார் பல்​லு​யிர் பெருக்​கத்தை மிக மோச​மாகப் பாதிக்​கும் என மனு​தா​ரர் குறிப்​பிட்​டுள்​ளார்.

அது​போல, பட்​டினப்​பாக்​கம் கடற்​கரை பகுதி மீனவர்​கள் அதி​க​மாக வாழும் இடமாகும், அப்​பகு​தி​யில் தான் அவர்​களின் வாழ்​வா​தா​ர​மும் உள்​ளது. இந்த சூழலில் பட்​டினப்​பாக்​கத்​தில் 25 ஏக்​கர் நிலத்​தில் புதிய தலை​மைச் செயல​கம் கட்​டு​வது மீனவர்​களை கடுமை​யாக பாதிக்​கும். ஏற்​க​னவே புதிய தலை​மைச் செயல​கம் கட்​டு​வதற்​கான அறி​விப்பு வெளி​யான நாளி​லிருந்து பட்​டினப்​பாக்​கம் மற்​றும் சீனி​வாசபுரம் ஆகிய மீனவ கிராமங்​களை சேர்ந்த மக்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​வ​தாக மனு​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, தமிழகத்​தின் நிதி​நிலை, சுற்​றுச்​சூழல் பாது​காப்​பு, மீனவர்​களின் வாழ்​வா​தா​ரம் உள்​ளிட்​ட​வற்றை கருத்​தில் கொண்​டு,பட்​டினப்​பாக்​கத்​தில் ரூ.1200 கோடி செல​வில் புதிய தலை​மைச் செயல​கம் கட்​டு​வதற்​கான அரசாணையை முற்​றி​லும் ரத்து செய்து உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட வேண்​டும்​ என மனு​வில்​ கோரப்​பட்​டுள்​ளது

📍 Cuddalore
📰 Hindu Tamil
🕒 1 hr ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads