South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

முதல் ரூ.100 கோடி படம்; சூரி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!

முதல் ரூ.100 கோடி படம்; சூரி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!

சூரி நடிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘மண்டாடி’. இந்தப் படத்தில் மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.
மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், அவர்களுக்குள் பாய்மரப் படகுப்போட்டியை முக்கிய கதைக்களமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தை ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார். மேலும் வெற்றிமாறன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் பாராட்டியிருந்தனர். இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
தொடர்ந்து பலரது பாராட்டை பெற்று வரும் இப்படம் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் 4 நாட்களில் ரூ.65 கோடியை கடந்துள்ளதாக தெரிவித்த படக்குழு அடுத்த 3 நாட்களிலேயே ரூ. 80 கோடி வசூலை கடந்துள்ளதாகத் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ரூ.100 கோடியை கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சூரியின் கரியரில் ரூ. 100 கோடி வசூலித்த முதல் படமாக இப்படம் மாறியுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து பதிவிட்ட சூரி, “உங்கள் பேரன்பால்… மண்டாடி 100 கோடியை கடந்துள்ளது. இந்த வெற்றி முழுக்க முழுக்க உங்களுடையது. கோடி நன்றிகள்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்

📍 Chennai
📰 Nakkheeran
🕒 23 hrs ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads