South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

ஆதவ் அர்ஜுனாவின் கேள்வி; சிபிஐ-யின் பதிலடி; தவெக-வுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே விரிசலா?

ஆதவ் அர்ஜுனாவின் கேள்வி; சிபிஐ-யின் பதிலடி; தவெக-வுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே விரிசலா?

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஐந்து முனைப்போட்டி நிலவுகிறது.

தவெகவின் பெரும்பான்மைக்கு ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சிகள்க, இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம் என்று அறிவித்தது.
இந்நிலையில்தான் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ”கம்யூனிஸ்ட் தோழர்கள் சில நேரம் வந்து பேசுவதுதான் வருத்தமாக இருக்கிறது.

கடந்த ஆட்சியில் சி.எம்.டி.ஏ., டாஸ்மாக் உள்ளிட்ட துறைகளில் ஊழல் நடைபெற்றதா இல்லையா? முன்னாள் அமைச்சர்கள் பணம் வாங்கினார்களா இல்லையா? இந்தத் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தியிருக்கும் கம்யூனிஸ்ட் தோழர்களால் நெஞ்சை நிமிர்த்தி, கடந்த திமுக ஆட்சியில் ஊழல் இல்லை எனச் சொல்ல முடியுமா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

📍 Vellore
📰 Nakkheeran
🕒 23 hrs ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads