South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

குடியுரிமைக்கு முன்பே வாக்காளர் அட்டை சோனியா காந்தி மீதான புகாரை விசாரிக்க மறுத்த உத்தரவு ரத்து: டெல்லி நீதிமன்றம் அதிரடி

குடியுரிமைக்கு முன்பே வாக்காளர் அட்டை சோனியா காந்தி மீதான புகாரை விசாரிக்க மறுத்த உத்தரவு ரத்து: டெல்லி நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி கடந்த 1983ல் இந்திய குடியுரிமை பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது தொடர்பான புகாரை விசாரிக்க மறுத்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய டெல்லி நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் விகாஸ் திரிபாதி டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்தல், குடியுரிமை பெறாதவரின் பெயரைச் சேர்த்தல் போன்ற குற்றச்சாட்டுகள் எழும்போது, மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதா என்பதை தீர்மானிக்க முறையான காரணங்களுடன் கூடிய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். 1980, 1982 மற்றும் 1983 ஆகிய ஆண்டுகளில் வாக்காளர் பட்டியலில் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டது, நீக்கப்பட்டது மற்றும் மீண்டும் சேர்க்கப்பட்டது ஆகிய நிகழ்வுகளின் வரிசைமுறை குறித்து மாஜிஸ்திரேட் உத்தரவில் எந்த விவாதமும் பதிவு செய்யப்படவில்லை.

📍 India
📰 Dinakaran Tamil
🕒 1 day ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads