South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

தமிழகத்தில் 27-ம் தேதி வரை மழை பெய்யும்

தமிழகத்தில் 27-ம் தேதி வரை மழை பெய்யும்

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​திய தமிழகம் மற்​றும் அதை ஒட்​டிய பகு​தி​களின் மேல் சுமார் 4.5 முதல் 7.6 கி.மீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நில​வு​கிறது.

தென்​கிழக்கு அரபிக்​கடல் முதல் ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு பகு​தி​யுடன் தொடர்​புடைய வளிமண்டல சுழற்சி வரை, சுமார் 5.8 முதல் 7.6 கி.மீ உயரம் வரை கேரளா, தமிழகம் மற்​றும் தென்​மேற்கு வங்​கக்​கடல் வழி​யாக காற்​றழுத்த தாழ்வு பாதை நில​வு​கிறது. இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் தென் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய மித​மான மழை பெய்​யக்​கூடும்.
இதர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசான மழை பெய்​யக்​கூடும். வரும் 23, 24 தேதி​களில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் மித​மான மழை​யும், சென்​னை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, திரு​வள்​ளூர் மற்​றும் ராணிப்​பேட்டை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை​யும், இதர தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசான மழை​யும் பெய்​யக்​கூடும்.

25, 26 தேதி​களில் வட தமிழகத்​தின் உள் பகு​தி​யில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை​யும், இதர தமிழகத்​தில் லேசான மழை​யும், 27-ம் தேதி தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் லேசான மழை​யும் பெய்​யக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். மாலை அல்​லது இரவு நேரங்​களில் நகரின் ஒருசில பகு​தி​களில் லேசான அல்​லது மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

📍 Tamilnadu
📰 Hindu Tamil
🕒 1 day ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads