South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி

ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளி

நகோயா: 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று துப்பாக்கி சுடுதலில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் சீனாவின் லிஹாவோ ஷெங் 254.2 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவின் ஹிமான்ஷு தில்லான் 252.4 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், ருத்ராங்க் ஷ் பாட்டீல் 230.9 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் ஹிமான்ஷு தில்லான், ருத்ராங்க் ஷ் பாட்டீல், பார்த்த் மானே ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1890.1 புள்ளிகளை குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. சீனா 1899 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும், தென் கொரியா 1884.2 புள்ளிகளை குவித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

செபக்டக்ராவில் ஏமாற்றம்

ஆடவருக்கான செபக்டக்ரா அணிகள் பிரிவில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானுடன் மோதியது. இதில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் இன்று மலேசியாவுடன் மோதுகிறது.

📍 India
📰 Hindu Tamil
🕒 1 day ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads