தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு 24 மணி நேரத்தில் 8 படுகொலைகள்; சட்டம்- ஒழுங்கு சீரழிவு: அரசு மவுனம் காக்காமல் உடனடியாக செயல்படுமா? பிரேமலதா கேள்வி
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு 24 மணி நேரத்தில் 8 படுகொலைகள்; சட்டம்- ஒழுங்கு சீரழிவு: அரசு மவுனம் காக்காமல் உடனடியாக செயல்படுமா? பிரேமலதா கேள்வி
12:39 AM Sep 21, 2026 IST
featured-imgfeatured-img
share
Share
fb
twitter
whatsapp
சென்னை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் 8 படுகொலைகள் காரணமாக சட்டம் -ஒழுங்கு சீரழிந்துள்ளது. எனவே அரசு மவுனம் காக்காமல் உடனடியாக செயல்படுமா என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பொதுமக்களிடையே மிகப்பெரிய அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு 24 மணி நேரத்தில் 8 படுகொலைகள்; சட்டம்- ஒழுங்கு சீரழிவு: அரசு மவுனம் காக்காமல் உடனடியாக செயல்படுமா? பிரேமலதா கேள்வி
12:39 AM Sep 21, 2026 IST
featured-imgfeatured-img
share
Share
fb
twitter
whatsapp
சென்னை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் 8 படுகொலைகள் காரணமாக சட்டம் -ஒழுங்கு சீரழிந்துள்ளது. எனவே அரசு மவுனம் காக்காமல் உடனடியாக செயல்படுமா என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மாவட்டத்தில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பொதுமக்களிடையே மிகப்பெரிய அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.Geographic Reference
மதுரையில் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே ஒருவர் நடுரோட்டில் விரட்டிச் சென்று வெட்டி படுகொலை, கிருஷ்ணகிரி அருகே டாஸ்மாக் கடையுடன் தொடர்புடைய இடத்தில் ஏற்பட்ட தகராறில் 33 வயது இளைஞர் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலைகளுக்கும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததற்கும் அரசு என்ன பதிலளிக்கிறது.
நெய்வேலி என்எல்சி திட்டங்களுக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை அரசு முதலில் உறுதி செய்ய வேண்டும். முதலில் ஏற்கனவே நிலம் வழங்கிய மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள், அதன் பின்னரே புதிய விளைநிலங்களை கையகப்படுத்துவது குறித்து பேசுங்கள்.