South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

மகளிர் T20I: `அதிக ரன்கள் குவித்தவர்...' - வரலாற்றுச் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தானா

மகளிர் T20I: `அதிக ரன்கள் குவித்தவர்...' - வரலாற்றுச் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தானா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட் அரையிறுதியில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது அவர் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறார். தற்சமயம் 4,765 ரன்களுடன் ஸ்மிருதி முதலிடத்தில் நிலைபெற்றுள்ள வேளையில், சுசி பேட்ஸ் 4,758 ரன்களுடன் அவரைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் ஸ்மிருதியின் இந்த அபார வளர்ச்சி, அவரது நீண்டகால அனுபவத்தை வெளிப்படுத்துகிறது.
இப்பட்டியலின் முன்னணி இடங்களில் நவீன கிரிக்கெட்டின் சிறந்த வீராங்கனைகள் வரிசைகட்டி நிற்கின்றனர். இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 4,287 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், அவருக்கு அடுத்தபடியாக இலங்கை அணியின் கேப்டன் சாமரி அத்தபத்து 4,282 ரன்களுடனும், நியூசிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் சோஃபி தேவடைன் 3,817 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசியக் கோப்பை குரூப்-ஏ ஆட்டத்தில் ஹாங்காங் அணிக்கு எதிராக விளையாடிய ஸ்மிருதி மந்தனா, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மிதாலி ராஜின் சாதனையை முறியடித்து, அனைத்து சர்வதேச கிரிக்கெட் வடிவங்களிலும் சேர்த்து அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையைப் படைத்தார். ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் 64 பந்துகளில் 124 ரன்கள் விளாசியதன் மூலம், மிதாலி ராஜ் வைத்திருந்த 10,868 ரன்கள் சாதனையை அவர் கடந்தார்.

ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் ஸ்மிருதி மந்தனா எடுத்த 124 ரன்கள், மகளிர் டி20 ஆசியக் கோப்பை வரலாற்றிலேயே ஒரு வீராங்கனை பதிவு செய்த அதிகபட்ச தனிநபர் ரன்னாக அமைந்தது. மேலும், மகளிர் டி20 போட்டிகளில் சதம் விளாசிய இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுருடன், ஸ்மிருதி மந்தனா பகிர்ந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

📍 Pondicherry
📰 Nakkheeran
🕒 2 days ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads