South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

கடலூர் சிப்காட், என்எல்சிக்காக கூடுதல் நிலங்களை கையகப்படுத்த அன்புமணி எதிர்ப்பு

கடலூர் சிப்காட், என்எல்சிக்காக கூடுதல் நிலங்களை கையகப்படுத்த அன்புமணி எதிர்ப்பு

சென்னை: ‘கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்காகவும், என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காகவும் நிலங்களைப் பறிப்பது கண்டிக்கத்தக்கது’ என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் வளாகம் அமைப்பதற்காக தியாகவல்லி, குடிக்காடு பகுதிகளில் ஏற்கனவே அறிவிக்கை செய்யப்பட்ட 1097 ஏக்கருடன் மேலும் 164 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை அரசு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே நிலப்பறிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஒட்டுமொத்த கடலூர் மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும், மீண்டும் சிப்காட் வளாகங்களையும், நிலக்கரி சுரங்கங்களையும் திணிப்பதும், நிலங்களைப் பறிப்பதும் கண்டிக்கத்தக்கவை.

கடலூர் மாவட்டத்தின் தலைநகரமான கடலூரில் 2,625 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் வளாகம் செயல்பட்டு வருகிறது. அதற்கு அருகிலேயே குடிக்காடு மற்றும் தியாகவல்லி பகுதிகளில் 1,119 ஏக்கரில் இன்னொரு சிப்காட் வளாகத்தை உருவாக்க முடிவு செய்த திமுக அரசு, அப்பகுதிகளில், 1097 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அரசாணையை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ம் தேதி பிறப்பித்தது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் தொடர் போராட்டங்களை நிகழ்த்தி வரும் நிலையில், இப்போது குடிக்காடு, தியாகவல்லி கிராமங்களில் மொத்தம் 164.20 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிக்கையை தமிழக அரசு கடந்த ஒன்றாம் தேதி வெளியிட்டுள்ளது.

இந்த நிலங்கள் அனைத்தும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து கடந்த காலங்களில் இரு தனியார் பெரு நிறுவனங்களால் குறைந்த விலையில் பறிக்கப்பட்டவை ஆகும். அந்த நிலங்களை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவற்றை அரசே பறிக்கத் துடிப்பதை ஏற்க முடியாது.

📍 Pondicherry
📰 Hindu Tamil
🕒 2 days ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads