South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஆசிய விளையாட்டு போட்டி கோலாகல ஆரம்பம்

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஆசிய விளையாட்டு போட்டி கோலாகல ஆரம்பம்

நகோயா: 20-வது ஆசிய விளை​யாட்​டுப் போட்டி ஜப்​பானின் ஐச்சி-நகோயா மாகாணத்​தில் உள்ள மைசுஹோ பார்க் தடகள மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற வண்​ணமய​மான கலை நிகழ்ச்​சிகளு​டன் கோலாகல​மாக தொடங்​கியது.

வரும் அக்​டோபர் 4 வரை நடை​பெற உள்ள இந்​தத் தொடரில் 45 நாடு​களைச் சேர்ந்த சுமார் 11,000 விளை​யாட்டு வீரர்​களும், ஆசிய ஒலிம்​பிக் கவுன்​சிலின் அகதி​கள் அணி​யினரும் கலந்​து​கொண்​டுள்​ளனர். இவர்​கள் 43 விளை​யாட்​டுப் பிரிவு​களில் 469 தங்​கப் பதக்​கங்​களுக்​காகப் போட்​டி​யிடு​கின்​றனர்.

பேரரசி மசாகோ, இளவரசர் அகிஷினோ, இளவரசி கிகோ, ஆசிய ஒலிம்​பிக் கவுன்​சில் தலை​வர் ஷேக் ஜோவான் பின் ஹமத் அல் தானி மற்​றும் சர்​வ​தேச ஒலிம்​பிக் கமிட்டி தலை​வர் கிரிஸ்டி கோவென்ட்ரி ஆகியோர் முன்​னிலை​யில் விளை​யாட்டு போட்​டிகளை ஜப்​பான் பேரரசர் நருஹிட்​டோ அதி​காரப்​பூர்​வமாக தொடங்கி வைத்​தார். ஜப்​பானிய தேசிய கீதம் இசைக்​கப்​பட்​டு, அந்​நாட்​டின் தேசி​யக் கொடி ஏற்​றப்​பட்​டதுடன் 2 மணி நேர விழா தொடங்​கியது.

தொடர்ந்​து, 45 நாடு​கள் மற்​றும் அகதி​கள் அணி​யைச் சேர்ந்த குழு​வினர் கலந்​து​கொண்ட வீரர்​களின் அணிவகுப்பு நடை​பெற்​றது. ஆப்​கானிஸ்​தான் அணி அணிவகுப்​பில் முதலா​வ​தாக நுழைந்​தது, அதே நேரத்​தில் ஆசிய விளை​யாட்​டில் ஆதிக்​கம் செலுத்தி வரும் சீனா, 800-க்​கும் மேற்​பட்ட விளை​யாட்டு வீரர்​களைக் கொண்ட குழு​வுடன் அணி வகுப்​பில் பங்​கேற்று அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​தது.

பாரிஸ் ஒலிம்​பிக் போட்​டிகளில் இரண்டு பதக்​கங்​களை வென்ற துப்​பாக்கி சுடு​தல் வீராங்​க​னை​யான மனு பாகர் மற்​றும் ஹாங்சோ ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் தங்​கம் வென்ற கபடி வீரர் பவன் ஷெராவத் ஆகியோர் அணிவகுப்​பின் போது 150 பேர் கொண்ட இந்​தி​யக் குழு​வுக்​குத் தலைமை தாங்​கி, பாரம்​பரிய​மான அடர் நீல நிற உடை​யில் மூவர்​ணக் கொடியைப் பெரு​மை​யுடன் ஏந்​திச் சென்​றனர்.

கடைசி நாடாக போட்​டியை நடத்​தும் ஜப்​பான் அணி வலம் வந்​தது. இம்​முறை இந்​தி​யா​வில் இருந்து 501 வீரர், வீராங்​க​னை​கள் கலந்​து​கொண்​டுள்​ளனர். இவர்​கள் 36 விளை​யாட்​டு​களில் 256 பிரிவு​களில் பங்​கேற்​கின்​றனர். 2023-ம் ஆண்டு ஹாங்சோ ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் இந்​தியா 28 தங்​கம் உட்பட 106 பதக்​கங்​களை வென்று சாதனை படைத்து 4-வது இடத்தை பிடித்​திருந்​தது. இம்​முறை இந்த பதக்க எண்​ணிக்​கையை உயர்த்​தும் முனைப்​பில் இந்​திய அணி செயல்​படு​வ​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும்.


தொடக்க விழாவுக்கு முன்​பாகவே சில போட்​டிகள் ஏற்​கெனவே தொடங்​கி​விட்​டன. நேற்று முன்​தினம் மகளிர் கிரிக்​கெட்டின் கால் இறுதி சுற்​றில் ஹர்​மன்​பிரீத் கவுர் தலை​மையி​லான இந்​திய அணி, 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் ஜப்​பானை வீழ்த்தி அரை​யிறு​திக்கு முன்​னேறி இருந்​தது.

ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் முதல்​முறை​யாக அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்ள டெக்​பால் விளை​யாட்​டில் இந்​தியா பதக்​கத்தை வெல்​லும் வாய்ப்​பில் உள்​ளது. மகளிருக்​கான ஒற்​றையர் பிரி​வின் அரை​யிறு​தி​யில்​ குவின்​சி

டிசோ​சா நேற்​று நடை​பெற்​ற அரை இறுதி சுற்​றில்​ தோல்​வி அடைந்​​தார்​. எனினும்​ இன்​று நடை​பெறும்​ வெண்​கலப்​ பதக்​கத்​துக்​​கான போட்​டி​யில்​ குவின்​சி டிசோ​சா களமிறங்​கவுள்​ளார்​.

தொழில்நுட்பத்தையும், கலாச்சாரத்தையும்

வெளிப்படுத்திய கண்கவர் கலை நிகழ்ச்சிகள் ஆசிய விளை​யாட்டு தொடக்க விழா​வில், ஜப்​பான் தனது தொழில்​நுட்ப மற்​றும் தொழில்​துறை பலத்​தை​யும், தனது ஆழமான கலாச்​சார வேர்​களை​யும் வெளிப்​படுத்​தி​யது. ‘இசை​வான இதயத் துடிப்​பு’ என்ற கருப்​பொருளு​டன் ஆசிய விளை​யாட்டு வீரர்​கள் வரவேற்​கப்​பட்​டனர். ‘ஒரே ஆசி​யா’ என்ற கருப்​பொருளைக் காட்சி ரீதி​யாக வெளிப்​படுத்​தும் வகை​யில் இதய வடி​வில் தொடக்க விழா​வின் மேடை அமைக்​கப்​பட்டு இருந்​தது. இது கண்​டம் முழு​வ​தி​லுமிருந்து வந்​துள்ள விளை​யாட்டு வீரர்​கள் மற்​றும் மக்​களை ‘இத​யத்​துடன் இதயம்’ இணைப்​ப​தாக அடை​யாளப்​படுத்​தப்​பட்​டது.

30,000 பார்​வை​யாளர்​கள் அமரும் வகை​யில் அமைந்​திருந்த மிசுஹோ பார்க் தடகள மைதானத்​தில் நடை​பெற்ற இந்த கண்​கவர் நிகழ்ச்​சி​யானது உள்​ளூர் தொழிற்​துறை தொழிற்​நுட்​பத்​தை​யும் பாரம்​பரிய கலை​யை​யும் இணைத்​தது. ஐச்சி மாகாணத்தை தலை​மை​யிடத்​தைக் கொண்​டுள்ள டொயோட்டா மோட்​டார் கார்ப்​பரேஷன் தனது புதுமை படைப்​பு​களை தொடக்க விழா​வில் காட்​சிப்​படுத்​தி​யது. ‘விண்​வெளி​யின் விழிப்​புணர்வு மற்​றும் எதிரொலிக்​கும் இதயத் துடிப்​பு’ என்ற வரவேற்பு நிகழ்ச்​சி​யுடன் தொடக்க விழா தொடங்​கியது. தொடர்ந்து ஜப்​பானின் பிரபல வயலின் கலைஞரும், இசையமைப்​பாள​ரு​மான தாரோ ஹகாசே​வின் இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது.

இதய வடிவி​லான சிறகு​களு​டன் கூடிய தேவதை ட்ரோன்​கள் காற்​றில் மிதந்து வந்து தொடக்க விழா​வின் வரவேற்பு நடனத்​துக்​காக அரங்​கத்தை புதிய உலகுக்கு அழைத்​துச் சென்​றது. சுமார் 240 நடனக் கலைஞர்​கள் பல்​வேறு வடிவங்​களில் ஒன்​றிணைந்​து, வாழ்க்​கை​யின் தொடர்​பை​யும் துடிப்​பை​யும் வெளிப்​படுத்​தினர். இறு​தி​யாக, நடனக் கலைஞர்​கள் ‘வெல்​கம்’ (WELCOME) என்ற சொல்லை உரு​வ​மைத்து விருந்​தோம்​பலை வெளிப்​படுத்​தினர்.நிகழ்ச்​சி​யின் இரண்​டாம் பகு​தி​யானது ஐச்​சி-நகோயா கலாச்​சார மற்​றும் பாரம்​பரி​யத்தை ‘இத​யத் துடிப்பு மற்​றும் பாரம்​பரி​யம்’ என்ற கருப்​பொருளு​டன் நகோயா கோட்​டையை மைய​மாகக் கொண்​டிருந்​தது. கண்​கவர் லேசர்​கள் நிகழ்த்தி ஐச்​சி-நகோ​யா​வின் உற்​பத்தி சிறப்பை வெளிப்​படுத்​தி​யது. ‘எதிர்​காலத்​துடன் இணை​யும் நல்​லிணக்​கம்’ என்ற தலைப்​பில், உற்​பத்தி வரலாற்றை பிர​திபலிக்​கும் வகை​யிலும் நிகழ்ச்சி நடை​பெற்​றது. இறு​தி​யில் போட்​டி​யின்​ இலட்​சினை​யான ஹோனோஹோன்​ நடனத்​துடன்​ விழா நிறைவடைந்​தது. இதைத் தொடர்ந்து மேடை​யில்​ போட்​டிக்​​கான ஜோதி ஏற்​றப்​பட்​டது.

📍 Tamil Nadu
📰 Hindu Tamil
🕒 2 days ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads