South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

‘பெண்களால் சிலிண்டரைத் தூக்க முடியாதா?’ - பெண்ணுக்கு பணி தர மறுத்த ஐஓசி-க்கு ரூ.12 லட்சம் அபராதம்

‘பெண்களால் சிலிண்டரைத் தூக்க முடியாதா?’ - பெண்ணுக்கு பணி தர மறுத்த ஐஓசி-க்கு ரூ.12 லட்சம் அபராதம்

புதுடெல்லி: ஹரி​யானா மாநிலத்தை சேர்ந்த சுமித்ரா என்ற பெண்​மணி, இந்தியன் ஆயில் நிறு​வனத்​தின் ​(ஐஓசி) எல்​பிஜி உருளை​கள் நிரப்​பும் ஆலை​யில் ‘ரீஃபில்​லிங் ஹெல்ப்​பர்’ பணிக்கு விண்​ணப்​பித்​திருந்​தார். ஆனால், பெண்​களால் கனமான எல்​பிஜி சிலிண்​டர்​களை தூக்க முடி​யாது எனக் கூறி, அவருக்​குப் பணி நியமனம் மறுக்​கப்​பட்​டது.

இந்​தி​யன் ஆயில் நிறு​வனத்​தின் இந்த முடிவைக் கடுமை​யாகக் கண்​டித்த உச்ச நீதி​மன்​றம், பெண்​களால் எல்​பிஜி சிலிண்​டர்​களை தூக்க முடி​யாது என்ற தவறான அனு​மானம் குறித்து காட்​ட​மாகக் கேள்வி எழுப்​பியது.

நீதிப​தி​கள் அரவிந்த் குமார் மற்​றும் விபுல் எம். பஞ்​சோலி ஆகியோர் அடங்​கிய அமர்வு இது குறித்து கூறுகை​யில், “பெண்களால் எல்​பிஜி உருளை​களைத் தூக்க முடி​யாது என்று நீங்கள் நினைக்​கிறீர்​களா? வீடு​களில் ஆண்​கள் இல்​லாத நேரத்தில், நாள்​தோறும் எல்​பிஜி உருளை​களைத் தூக்​கு​வதும் அதை மாற்​று​வதும் பெண்​கள் தான். அப்​படி​யிருக்க, பெண் என்ற ஒரே காரணத்துக்​காக அவருக்​குப் பணி மறுக்​கப்​பட்​டது பெண்​மைக்கே இழைக்​கப்​பட்ட பெரும் அவமான​மாகும்” என்று கடுமையாக சாடியது.

1988-ம் ஆண்டு தொடங்​கிய இந்த நீண்​ட​கால சட்​டப் போராட்​டம் உச்ச நீதி​மன்​றத்​திற்கு வந்​த​போது, சுமித்ரா பணி ஓய்வு பெறும் வயதைக் (63 வயது) கடந்​து​விட்​டார். எனவே, பணி​யில் அமர்த்த முடி​யாது என்​ப​தால், அவருக்​குப் பண ரீதியி​லான இழப்​பீடு வழங்​கு​வதே சரி​யான தீர்​வாக இருக்​கும். எனவே, சுமித்​ரா​வுக்கு ஒரே தவணை​யாக ரூ.12 லட்​சம் இழப்​பீட்​டுத் தொகையை வழங்குமாறு ​ஐஓசி-க்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது

📍 Tamil nadu
📰 Hindu Tamil
🕒 3 days ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads