South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

'நாம ஏன் இறங்கிப் போகணும்' - அதிமுக-வுக்கு செக்... பாமக முடிவின் பின்னணி என்ன?

'நாம ஏன் இறங்கிப் போகணும்' - அதிமுக-வுக்கு செக்... பாமக முடிவின் பின்னணி என்ன?

"2016,21 தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வாங்கிய வாக்குகள் எவ்வளவு, 2026 தேர்தலில் திலகபாமா வெறும் 8500 வாக்குகள் வாங்கினார். அ.தி.மு.க வாக்குகள் எல்லாம் எங்கே போனது."

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என அதிரடியாக அறிவித்திருக்கிறார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ். அ.தி.மு.கவுக்கு எப்படியும் பா.ம.க ஆதரவளித்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ். அவரின் இந்த அறிவிப்புக்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன?

2026 சட்டமன்றத் தேர்தலில், த.வெ.க ஆட்சியமைத்த நிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, கரூர் எம்.ஆர் விஜயபாஸ்கர், விராலிமலை சி விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசைக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இரண்டு தொகுதிகளில் வென்ற முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.

Sஇந்நிலையில் 7 தொகுதிகள் காலியானதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். இந்நிலையில், தாராபுரம், மதுராந்தகம் என 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு ஆறாம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஐந்து முனை போட்டி உருவாகியிருக்கிறது. இந்தநிலையில், மதுராந்தகம் தொகுதியில் செல்வாக்குமிக்க பா.ம.கவின் ஆதரவு யாருக்கு என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. கடந்த தேர்தலைப் போல அ.தி.மு.கவுக்கு ஆதரவளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்லப்பட்டது. இந்தநிலையில் யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவித்திருக்கிறது பா.ம.க. இதன் பின்னணி குறித்து கட்சி வட்டாரத்தில் பேசினோம்..,

``அ.தி.மு.கவினரின் குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் அலட்சியப் போக்கே இதற்கு முழுமுதற் காரணம். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே, உட்கட்சிப் பிரச்னையைக் காரணம் காட்டி எங்களுக்கான தொகுதிகளைக் குறைத்ததோடு மட்டுமல்லாமல், நாங்கள் கேட்ட தொகுதிகளையும் கொடுக்கவில்லை. அதுமட்டுமல்ல, பல தொகுதிகளில் எங்கள் வாக்குகள் அ.தி.மு.க வேட்பாளர்களுக்குச் சென்ற அளவு அவர்களின் வாக்குகள் எங்களுக்கு வரவில்லை. தர்மபுரியில் எங்களால் அவர்கள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். ஆனால், பென்னகரத்தில் கூட அவர்களின் வாக்குகள் எங்களுக்கு வரவில்லை.

📍 Chennai
📰 Nakkheeran
🕒 3 days ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads