South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி - மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி - மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்

வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரை கூடுதல் சுங்க வரி விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ரஷ்யா மற்​றும் ஈரான் மீது தடைகளை விதிக்​கும் ‘லின்ட்சே ஓ கிரகாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடை சட்டம் 2026’-க்கு அதிபர் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை அன்று கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டம் மூலம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொள்முதல் செய்யும் முக்கிய நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்கும் அதிகாரத்தை அதிபர் ட்ரம்ப் பெற்றுள்ளார். இதன் மூலம் எந்தெந்த நாடுகளுக்கு வரி விதிப்பது, வரி விதிப்பு விகிதம், விதிகளை தளர்த்தி வரி விலக்கு அளிப்பது உள்ளிட்டவற்றை ட்ரம்ப் தீர்மானிக்க முடியும் என தகவல்.
இந்தச் சட்டம் அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்ததில் இருந்து 30 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் முதல் 5 நாடுகளான சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் உள்ளன.

இருப்பினும் இந்த நாடுகளின் பெயர்கள் அமெரிக்க மசோதாவில் குறிப்பிடப்படவில்லை. ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் முதல் 5 நாடுகள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் - இந்தியா உறுதி

நாட்​டின் 140 கோடி மக்​களின் எரிசக்​தித் தேவையைப் பூர்த்தி செய்​வ​தில் இந்​தியா உறு​தி​யுடன் உள்​ளது. சந்தை நில​வரங்​களுக்கு ஏற்ப பல்​வேறு நாடு​களிடம் இருந்து கச்சா எண்​ணெயைக் கொள்​முதல் செய்​வது தொடரும்.

📍 Pondicherry
📰 Hindu Tamil
🕒 4 days ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads