'உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்...' - முதல்வர் விஜய்யின் இடைத்தேர்தல் பிரசார பிளான் என்ன?
தாராபுரத்துக்கு ஒரு நாளும் மதுராந்தகத்துக்கு ஒரு நாளும் முதல்வர் சென்று வந்தாலே போதுமென வியூக வகுப்புக் குழு நினைத்தது. களம் கொஞ்சம் கடினமாக இருக்கும் என ரிப்போர்ட் கிடைத்ததால்தான் முதல்வரின் பிரசாரத்தை தொகுதிக்கு இரண்டு நாட்கள் என மாற்றியிருக்கிறார்கள்
நம்மிடையே பேசிய சீனியர்கள் சிலர், 'மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் அரசின் மீது கொஞ்சம் அதிருப்தி இருக்கத்தான் செய்கிறது. மேலும், அதிமுகவிலிருந்து விலகி வந்த எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தது கொஞ்சம் நெகட்டிவாக மாறியிருக்கிறது.
எதிர்க்கட்சிகளும் இவற்றை கையிலெடுத்து களமாட தொடங்கிவிட்டன. எதிர்பார்க்கும் களம் அத்தனை எளிதாக இருக்காது என உளவுத்துறையும் தலைமைக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடித்து வெற்றியை உறுதி செய்யும் வகையில் வலுவாக தன்னுடைய பிரசாரத்தை வடிவமைக்க சொல்லி வியூக வகுப்புப் புள்ளியிடம் முதல்வர் கூறியிருக்கிறார். வழக்கம்போல, ஒரே ஒரு நாள் மட்டும் அதாவது தாராபுரத்துக்கு ஒரு நாளும் மதுராந்தகத்துக்கு ஒரு நாளும் முதல்வர் சென்று வந்தாலே போதுமென வியூக வகுப்புக் குழு நினைத்தது. களம் கொஞ்சம் கடினமாக இருக்கும் என ரிப்போர்ட் கிடைத்ததால்தான் முதல்வரின் பிரசாரத்தை தொகுதிக்கு இரண்டு நாட்கள் என மாற்றியிருக்கிறார்கள் . அதன்படி செப்டம்பர் 25, அக்டோபர் 2 ஆம் தேதிகளில் மதுராந்தகத்தில் முதல்வர் பிரசாரம் செய்யவிருக்கிறார்