South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

ஆசிய விளையாட்டு வீரர்களுக்கு தங்கும் இடங்களில் சிக்கல்: 2 பேர் தங்க வேண்டிய சொகுசு கப்பல் அறையில் 3 பேருக்கு அனுமதி

ஆசிய விளையாட்டு வீரர்களுக்கு தங்கும் இடங்களில் சிக்கல்: 2 பேர் தங்க வேண்டிய சொகுசு கப்பல் அறையில் 3 பேருக்கு அனுமதி

நகோயா: 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 45 நாடுகளை சேர்ந்த 17 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். தொடக்க விழா நாளை நடைபெற உள்ள நிலையில் வீரர், வீராங்கனைகள் தங்குமிடங்களில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுவாக ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டு, தெற்காசிய விளையாட்டு போட்டிகளை நடத்தும் நாடுகள் வீரர்கள் தங்குவதற்காக பிரம்மாண்டமாக விளையாட்டு கிராமம் ஒன்றை அமைப்பார்கள். ஆனால் இம்முறை போட்டியை நடத்தும் ஜப்பான் செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக சுமார் 17,000 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் சொகுசு கப்பல், கண்டெய்னர் போன்ற தற்காலிக மரக் குடியிருப்புகள் மற்றும் சாதாரண ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நகோயா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘கோஸ்டா செரீனா’ என்ற இத்தாலிய சொகுசு கப்பலில் ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைள் தங்கியுள்ளனர். சுமார் 300 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பலில் 1,500 அறைகள் உள்ளன. இதில் ஒரு அறை 2 வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை 3 பேர் பகிர்ந்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

📍 Nikoya
📰 Hindu Tamil
🕒 5 days ago

Related News

தேசிய விருதைப் பெற்ற தனுஷ், ஜி.வி.பிரகாஷ்; தமிழ் படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்!
தேசிய விருதைப் பெற்ற தனுஷ், ஜி.வி.பிரகாஷ்; தமிழ் படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்!
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
Back
Post Ad
To Ads