ஏழுமலையானுக்கு தினமும் 45 வகை நைவேத்தியங்கள்
திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் 45 வகையான நைவேத்தியங்கள் படைக்கப்படுகின்றன. அலங்கார பிரியரான திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் 20 வகையான அன்ன பிரசாதங்களும், 25 வகையான பணியாரங்களும் ஆகம சாஸ்திர விதிகளின்படி, நைவேத்தியங்களாகப் படைக்கப்படுகின்றன. அதிகாலை முதல் மணி அடித்த பின்னர் முதலாவது நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
இதில், முத்கான்னம் (நெய் பொங்கல்), மாத்ரா அன்னம், திந்திரி நீரரான்னம் (புளியோதரை), தத்யோதனம் (தயிர் சாதம்), குடா அன்னம் (சர்க்கரை பொங்கல்), ஷாகா அன்னம் (கதம்பம் அன்னம்), சக்கரா அன்னம் (ரவா கேசரி) போன்றவை சமர்ப்பிக்கப்படுகின்றன. இவற்றுடன் தினமும் 4 வகை பணியாரங்களையும் நைவேத்தியங்களாகச் சமர்ப்பிக்கின்றனர். இதில் லட்டு, மாஷாப்பம் (வடை), குடாப்பம் (அப்பம்), சக்கரப்பம் (தோசை) போன்றவை முதல் மணி அடித்த பிறகு நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன.