South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலை திறப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலை திறப்பு

கொல்கத்தா: பிரதமர் மோடி​யின் பிறந்​த​நாளை முன்​னிட்டு மேற்கு வங்க பாஜக தலை​மையகத்​தில் அவருடைய மெழுகு சிலை நேற்று திறக்​கப்​பட்​டது.

பிரதமர் நரேந்​திர மோடிக்கு நேற்று 76-வது பிறந்த நாள். மேலும் குஜ​ராத் முதல்​வர், பிரதமர் என அரசு பதவி​யில் தொடர்ந்து 25 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்​ளார். இதையொட்டி பாஜக சார்​பில் நாடு முழு​வதும் நேற்று பல்​வேறு சிறப்பு நிகழ்ச்​சிகளுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. மேற்கு வங்கம் கொல்​கத்​தா​வில் உள்ள பாஜக தலை​மையகத்​தில், பிரதமர் மோடி​யின் மெழுகுச் சிலை திறக்​கப்​பட்​டது.
இந்த சிலையை உருவாக்கிய ஸ்த​பதி சுஷாந்தா ராய் கூறும்​போது, “பிரதமர் மோடி​யின் மெழுகுச் சிலையை உரு​வாக்க வேண்​டும் என்​பது எனது நீண்​ட​நாள் கனவு. இந்​தச் சிலை மெழுகு மற்​றும் இரும்​பால் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. 5.7 அடி உயரம் கொண்​டது. இதற்கு ஒரு தனித்​து​வ​மான தோற்​றத்​தைத் தர பெங்​காலி வேட்டி மற்​றும் குர்தா அணி​வித்​துள்​ளேன். இந்த சிலையை உரு​வாக்க 2 மாதங்​கள் ஆனது.

மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக வெற்றி பெற்​றபோது, டெல்​லி​யில் உள்ள பாஜக தலை​மையகத்​தில் நடந்த கொண்​டாட்​டத்​தில் பிரதமர் மோடி கலந்​து​கொண்​டார். அப்​போது அவர் சென்​றிருந்த தோற்​றத்தை அடிப்​படை​யாகக் கொண்டு இந்தச் சிலையை உருவாக்கியுள்ளேன்" என்றார்.

📍 Kolkatta
📰 Hindu Tamil
🕒 5 days ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads