South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

தவெக என்றால் தள்ளிப்போடும் வெற்றிக் கழகம்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

தவெக என்றால் தள்ளிப்போடும் வெற்றிக் கழகம்: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

சென்னை: திட்டங்கள் அனைத்தும் தள்ளிவைக்கப்படுவதால், தவெகவை ‘தள்ளிப்போடும் வெற்றிக் கழகம்’ என பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பிரதமர் மோடியின் பிறந்தநாள் நிகழ்வை செப்.17 முதல் அக்.17 வரை கொண்டாட இருக்கிறோம். இதற்காக ரத்த தான முகாம், மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சத்தம் மட்டுமே கொடுத்துக் கொண்டிருக்கிற அரசியல்வாதிகள் மத்தியில் ரத்தம் கொடுக்கின்ற அரசியல்வாதிகளாக பாஜகவினர் உள்ளனர்.
பட்டினப்பாக்கம் மீனவர்களின் பட்டினம். அங்கு தலைமைச் செயலகம் கட்டக்கூடாது. இதை முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தற்போதைய சூழலில், தலைமைச் செயலகம் வேண்டுமா என்பதையும் முடிவு செய்ய வேண்டும்.

லண்டனில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக முதல்வர் சொல்கிறார். அவர் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்தாரா அல்லது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நிறுவனத்தின் முதலீடுகளை ஈர்த்தாரா என்பது தெரியவில்லை.

எனவே, எந்தெந்த நிறுவனங்கள் உண்மையிலேயே தமிழகத்தில் முதலீடுகளை செய்ய இருக்கின்றன என்பதை தமிழக மக்களுக்கு முதல்வர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும்.

📍 Tamilnadu
📰 Hindu Tamil
🕒 5 days ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads