வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 2,655 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்
சென்னை: வார விடுமுறையை முன்னிட்டு 2,655 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: வார விடுமுறை நாட்களையொட்டி சென்னையிலிருந்து பிற இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் பல்வேறு நகரங்களுக்கும் கூடுதல் பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில்கொண்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை 760 பேருந்துகளும், நாளை சனிக்கிழமை 520 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.