அமைச்சர் பதவிக்காக கூட்டணி மாறினீர்கள்: திருமாவளனுக்கு பிரேமலதா பதில்
சென்னை: அமைச்சர் பதவிக்காகத்தான் கூட்டணி மாறினீர்கள், என்று தேமுதிக குறித்து பேசிய திருமாவளனுக்கு பிரேமலதா பதில் அளித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் கொடுத்து விட்டார்கள். அதனால் கூட்டணியில் இருந்து வெளியேறினோம், என்று திருமாவளவன் சொல்கிறார். இதே திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் வைகோ ஆகியோர் சென்று தான் 2016ல் ‘மக்கள் நல கூட்டணி’ என்பதை தொடங்கினார்கள். அதன் பிறகு, இதே அலுவலகத்தில் விஜயகாந்த்தை சந்தித்து, ‘இந்த கூட்டணிக்கு நீங்கள் தலைமை ஏற்க வேண்டும், நீங்கள்தான் முதல்வர் வேட்பாளர்’ என்று கூறியவரும் திருமாவளவன் தான்.