South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம்; டிரம்பிடம் சாஷ்டாங்கமாக பணிந்த மோடி: ராகுல் காந்தி கடும் தாக்கு

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம்; டிரம்பிடம் சாஷ்டாங்கமாக பணிந்த மோடி: ராகுல் காந்தி கடும் தாக்கு

புதுடெல்லி: யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்பட்டது தொடர்பாக வீடியோ வெளியிட்ட ராகுல் காந்தி, அமெரிக்காவுக்கு பெருமளவிலான பணத்தை வழங்கி, அதிபர் டிரம்ப் முன்பாக சாஷ்டாங்கமாக விழ பிரதமர் மோடி முடிவு செய்து விட்டதாகவும் விமர்சித்துள்ளார். அடுத்த மாதம் 15ம் தேதி முதல் வணிர்களுக்கு யுபிஐ மூலம் செய்யப்படும் ரூ.2,000க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் எம்டிஆர் கட்டணம் விதிப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் பதிவில் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியிடம் ஒருமுறை ‘நீங்கள் இடதுசாரி பக்கமா அல்லது வலதுசாரிகள் பக்கமா?’ என கேட்கப்பட்ட போது, ‘நான் இடதுபுறமும் சாயவில்லை, வலதுபுறமும் சாயவில்லை. நேராக நிற்கிறேன்’ என்று பதிலளித்தார். ஆனால் மோடியின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டது. இவரும் இடதுசாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல, ஆனால் அதிபர் டிரம்ப் முன்பு நேராகக் கீழே படுத்து சாஷ்டாங்கமாகப் பணிய முடிவு செய்துள்ளார்.

யுபிஐக்கு வரி விதிப்பதன் மூலமும், அமெரிக்காவுக்குப் பெருமளவிலான பணத்தை வழங்குவதன் மூலமும் ஒவ்வொரு இந்தியர் மீதும் அவர் வரியை சுமத்தி உள்ளார். மோடி அவர்களே, யுபிஐ வரியை திரும்பப் பெறுங்கள். இப்போதே அதைச் செய்யுங்கள். இவ்வாறு ராகுல் காந்தி கூறி உள்ளார்.

📍 Delhi
📰 Dinamani
🕒 6 days ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads