மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கோலாகலமாகத் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக, கடந்த 2009-ஆம் ஆண்டு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த விழாவிற்காக 12 கால வேள்விகள் மற்றும் 184 ஹோம குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலை பூஜைகள் முன்னதாகவே தொடங்கின.
இன்று அதிகாலை முதலே இதர தெய்வ சன்னதிகளுக்கும், காலை 07:40 மணி முதல் அம்மன், சுவாமி தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த வரலாற்று நிகழ்வைக் காண மதுரையில் குவிந்தனர்.
இன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் வழிபாடுகள் தொடங்கி யானை மகால் அருகே சூரியனிடம் இருந்து யாக சாலைக்கு அக்னி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை 4.35 மணிக்கு மேல் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதை தொடர்ந்து இன்று காலை வரை, மொத்தம் 12 கால யாகசாலை பூஜைகள் நடந்தது. யாகசாலை பூஜை மற்றும் மகா பூர்ணாஹுதியைத் தொடர்ந்து பரிவார மூர்த்திகளுக்கான கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. .