தவெக கூட்டணி: "ராகுல் காந்தியை பிரதமராக ஏற்கவில்லை எனில்..." - செல்வப்பெருந்தகை
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காதவர்களிடம் கூட்டணிக்கான வாய்ப்பு என்ன இருக்கிறது எனச் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள், சென்னையில் அவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, ``சுதந்திரப் போராட்ட தியாகியும், பிற்படுத்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்கு வித்திட்டவர் தலைவர் ராமசாமி படையாட்சியார். ராமசாமி படையாட்சியார் தன் மக்களுக்காகவும், மாநிலத்திற்காகவும், தேசத்திற்காகவும் எந்தவொரு கருத்தையும் துணிச்சலுடனும் தைரியத்துடனும் பதிவு செய்யக்கூடியவர்.
அத்தகைய துணிச்சலும் ஆளுமையும் இன்றைய அரசியல் சூழலில் குறைந்திருக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.