South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை படையல்

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் உள்ள மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப் பிள்ளையாருக்கு தலா 75 கிலோ எடையில் 150 கிலோ கொழுக்கட்டை நைவேத்தியம் படைக்கப்பட்டது.

திருச்சி மலைக்கோட்டையில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள மாணிக்க விநாயகருக்கும், மலைமேல் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கும் தலா 75 கிலோ எடையில் 150 கிலோ கொழுக்கட்டை ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று தயார் செய்யப்பட்டு படைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் கொழுக்கட்டை தயார் செய்யும் பணி கடந்த 13-ம் தேதி காலை தொடங்கி நடைபெற்று வந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் 75 கிலோ கொழுக்கட்டை மாணிக்க விநாயகருக்கும், 75 கிலோ கொழுக்கட்டை உச்சிப் பிள்ளையாருக்கும் காலை 9 மணிக்கு நைவேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் இந்தக் கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

📍 Trichy
📰 Hindu Tamil
🕒 7 days ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads