South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் 4,179 வார்டுகளில் பாஜக வெற்றி; 3,613-ல் வென்ற காங்கிரஸ்

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் 4,179 வார்டுகளில் பாஜக வெற்றி; 3,613-ல் வென்ற காங்கிரஸ்

புதுடெல்லி: பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்​தில் மொத்​தம் 10 மாநக​ராட்​சிகள், 51 நகராட்சி மன்​றங்​கள் மற்​றும் 248 நகராட்சிகளுக்​கான தேர்​தல்​கள் 2 கட்​டங்​களாக நடை​பெற்​றன. செப்டம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரு கட்ட தேர்தலிலும் மொத்தம் 74.05% வாக்குகள் பதிவாகின. தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது.

இவற்​றில், பாஜக​வுக்கு 4,179 மற்​றும் காங்​கிரஸுக்கு 3,613 வார்டுகள் கிடைத்​துள்​ளன. ஜெய்​பூர், கோட்​டா, உதய்​பூர் மற்​றும் பில்​வா​ரா​வில் பாஜக​வினர் அதி​கம் வெற்றி பெற்​றுள்​ளனர். காங்கிரஸுக்கு அஜ்மீர், பிக்​கானேர் மற்​றும் பாலி​யில் அதிக வார்டு​கள் கிடைத்​துள்​ளன. சுயேச்​சைகள் மற்​றும் இதர கட்சியினருக்கு 2,436 வார்​டு​களில் வெற்றி கிடைத்​துள்​ளது. உ.பி. முன்​னாள் முதல்​வர் மாயா​வ​தி​யின் பகுஜன் சமாஜ் கட்​சி​யின் 19 பேர் வெற்றி பெற்​றுள்​ளனர்.
பாஜக முதல்​வர் பஜன்லால் தலை​மையி​லான அரசின் 20 மாத கால ஆட்​சிக்​கான சோதனை​யாக இந்​தத் தேர்​தல் கருதப்​பட்​டது. இதன் முடிவு​களில், முதல்​வர் பஜன்லால் அரசு வெற்றி பெற்றுள்ளதையே தேர்​தல் முடிவு​கள் உணர்த்​துகின்​றன. பாஜகவின் பல முக்​கி​யத் தலை​வர்​களால் தங்​கள் வார்​டு​களில் வெற்​றி பெற முடிய​வில்​லை.

மத்​திய அமைச்​சர் கஜேந்​திர சிங் ஷெகாவத்​தின் வார்​டில் பாஜக தோல்​வியைச் சந்​தித்​தது. முன்​னாள் முதல்​வர் வசுந்​தரா ராஜேவின் கோட்​டை​யாகக் கருதப்​படும் ஜலா​வாரில் பாஜக​வால் பெரும்​பான்​மை​யைப் பெற முடிய​வில்​லை. முதல்​வர் பஜன்​லால் சர்​மா​வின் மாவட்​ட​மான பரத்​பூர் மாநக​ராட்​சி​யிலும் பாஜக​வால் பெரும்​பான்​மை​யைப் பெற முடிய​வில்​லை. பாஜக மாநிலத் தலைவர் மதன் ரத்​தோடின் கோட்​டை​யான பாலி​யிலும் பாஜக தோல்​வியைச் சந்​தித்​தது.

இதே​போல், ராஜஸ்​தான் முன்​னாள் முதல்​வரும் மூத்த காங்​கிரஸ் தலை​வரு​மான அசோக் கெலாட் வசிக்​கும் வார்​டில் காங்​கிரஸ் தோல்​வியைச் சந்​தித்​துள்​ளது. கெலாட் வசிக்கும் வார்​டில் பாஜக வெற்றி பெற்​றது ஒரு முக்​கி​யத் திருப்​பமாகும். காங்​கிரஸின் முன்னாள் மத்​திய அமைச்​ச​ரான சச்​சின் பைலட் வசிக்​கும் ஜெய்ப்பூர் மாநக​ராட்​சி​யின் 97-வது வார்​டிலும் பாஜக வெற்றி பெற்​றுள்​ளது. இருப்​பினும், பைலட்​டின் தொகு​தி​யான டோங்​கில் காங்​கிரஸ் அமோக வெற்றிபெற்​றுள்​ளது.

📍 Maharastra
📰 Smacy News
🕒 7 days ago

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸின் நண்பரிடம் விசாரணை
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
கர்நாடகா​வுக்கு கூடு​தலாக 70 டிஎம்சி காவிரி நீர் கோரிய மனு தளளு​படி
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
இலங்கை அணியை வீழ்த்தி மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
Back
Post Ad
To Ads