South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி

தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி

சென்னை: திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர். இதன்படி ஆதரவு கருத்துகள் விவரம்:

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: பல ஆண்டுகளாக இந்துக்களின் கண்ணில் குடிகொண்டிருந்த ஏக்கம் பஞ்சாகப் பறந்துவிட்டது. மதநல்லிணக்கம் என்ற பெயரில் இந்துக்களின் அடையாளங்களை திட்டமிட்டு அழிக்கத் துடித்தவர்களின் சதித் திட்டங்களை இத்தீர்ப்பு தவிடுபொடி ஆக்கியுள்ளது.

முன்னாள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்: பக்தர்களின் நீண்டகாலக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்று, தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதில் மகிழ்ச்சி.

பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை: இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்றலாம் என்ற தீர்ப்பு ஓரளவு மகிழ்ச்சி. விளக்கேற்றிய வெற்றித் தூணை நாம் பார்க்கப் போகிறோம் என்ற வகையில் மகிழ்ச்சிதான்.
பாஜக தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரிவு மாநில தலைவர் அர்ஜுனமூர்த்தி: நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதும், முழுமையாகப் பின்பற்றுவதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை. இதை ஒரு மதத்தின் வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க அவசியம் இல்லை.

வீ த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை: இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றம் நிரந்தர தீர்வு வழங்கும் என நம்புகிறோம்.

புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி: தீபம் ஏற்றுவதால் யாருடைய உரிமையும் பறிபோகாது. அரசு கவுரவம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

📍 Madurai
📰 Smacy News
🕒 2 days ago

Related News

நாட்டின மாடு வளர்க்கும் 5,000 பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!
நாட்டின மாடு வளர்க்கும் 5,000 பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நெல்லையை தலைமையிடமாக கொண்டு "இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை"
நெல்லையை தலைமையிடமாக கொண்டு "இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை"
⬅ Back
➕ Post Ad
To Ads ➡