South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

ஹசீனா நாடு திரும்ப தாமதம்

ஹசீனா நாடு திரும்ப தாமதம்

புதுடெல்லி: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்​டும் என்று வங்கதேச அரசு வலியுறுத்​து​வது, அவர் தாயகம் திரும்​புவதைத் தாமதப்​படுத்​தும் உத்தி என்று கூறப்படுகிறது.

வங்​கதேசத்​தில் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் மாணவர்​கள் தலை​மையில் நடை​பெற்ற போராட்​டத்​தைத் தொடர்ந்து, அப்​போதைய பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்​கப்​பட்​டது. ஷேக் ஹசீனா அங்​கிருந்து தப்பி வந்து இந்​தி​யாவில் தஞ்​சம் அடைந்து தற்​போது இங்கு வசித்து வரு​கிறார். இந்​நிலை​யில், ஷேக் ஹசீனா வரும் டிசம்​பரில் வங்​கதேசம் திரும்​பத் திட்​ட​மிட்​டுள்​ள​தாக தெரிவித்துள்​ளார். அவருக்கு மரண தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யிலும், நாடு திரும்​புவதில் உறுதி​யாக இருப்​ப​தாக அவர் கூறியுள்​ளார்.
இதையடுத்து, ஷேக் ஹசீனா​வுக்​காக வாதாடி வரும் லண்​டனைச் சேர்ந்த மேட்​ரிக்ஸ் சேம்​பர்ஸ் சட்ட நிறு​வனம், புதிய பாஸ்​போர்ட் மற்​றும் தேசிய அடை​யாள அட்டை வழங்​கக் கோரி கடந்த 9-ம் தேதி டெல்​லி​யில் உள்ள வங்​கதேச தூதரகத்​துக்கு மின்​னஞ்​சல் அனுப்​பியது. ஆனால், அந்​தக் கோரிக்​கையை அனுப்​புவதற்கு ஷேக் ஹசீனாவின் ஒப்​புதல் பெறப்​பட​வில்லை என்று வங்​கதேச அதி​காரி​கள் கேள்வி எழுப்​பினர். இதையடுத்து, ஷேக் ஹசீனா சார்​பில் செயல்​படுவதற்​கான அவரது கையொப்​பமிட்ட ஒப்​புதல் கடிதத்​துடன், மேட்​ரிக்ஸ் சேம்​பர்ஸ் நிறு​வனம் நேற்​று முன்​தினம் 2-வது கடிதத்தை தூதரகத்​துக்கு அனுப்​பியுள்​ளது.

ஷேக் ஹசீனா தாயகம் திரும்​புவதற்​குத் தேவை​யான பாஸ்​போர்ட்டை வழங்க மறுப்​ப​துடன், அவரை நாடு கடத்த வேண்​டும் என்​றும் வங்​கதேசம் வலியுறுத்​து​வது, அவர் நாடு திரும்​புவதைத் தாமதப்​படுத்​தும் செயல் என்று இந்​தி​யத் தரப்​பைச் சேர்ந்த வட்டாரங்​கள் தெரி​வித்​தன.
ஒரு​வர் தாமாக முன்​வந்து நாடு திரும்ப விரும்​பவில்லை என்​றால், அவரை வலுக்​கட்​டாய​மாகத் திருப்பி அனுப்​புவதற்​கான வழிமுறையே நாடு கடத்​தல்். ஆனால், ஷேக் ஹசீனா தாமாகவே வங்​கதேசம் திரும்பி நீதி​மன்​றத்​தில் சரணடையத் தயாராக இருப்​ப​தாக தெரி​வித்​துள்​ளார்.

ஒரு​வர் தாமாக முன்​வந்து நாடு திரும்ப முடிவு செய்​து​விட்​டால், அவரை நாடு கடத்த வேண்​டிய அவ​சி​யம் இல்லை. அவரது முடிவிற்கு இந்​தியா எந்​தத் தடையையும் ஏற்​படுத்​த​வில்லை. பயண ஆவணம் இல்​லாததே அவரது பயணத்​துக்​குத் தடை​யாக உள்​ளது. ஷேக் ஹசீனா வங்​கதேசக் குடிமகள் என்​ப​தால், அவருக்குப் பாஸ்​போர்ட் வழங்​கும் அதி​காரம் வங்​கதேச அரசுக்கு மட்​டுமே உள்​ளது. இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

📍 Trichy
📰 Smacy News
🕒 2 days ago

Related News

நாட்டின மாடு வளர்க்கும் 5,000 பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!
நாட்டின மாடு வளர்க்கும் 5,000 பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நெல்லையை தலைமையிடமாக கொண்டு "இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை"
நெல்லையை தலைமையிடமாக கொண்டு "இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை"
⬅ Back
➕ Post Ad
To Ads ➡