South India's No.1 Digital Mobile Paper
LIVE
Welcome to Smacy Media

2028 தேர்தலில் போட்டியில்லை – சித்தராமையா அறிவிப்பு

2028 தேர்தலில் போட்டியில்லை – சித்தராமையா அறிவிப்பு

கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா, 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மீண்டும் தெரிவித்துள்ளார். மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு தற்போது 80 வயதாகிவிட்டதாகவும், வயது காரணமாக தேர்தல் பிரசாரங்களில் முன்பு போலச் செயல்படுவது கடினமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

2028 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுமாறு தனது ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இருப்பினும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஜூலை மாதத்தில் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவது தொடர்பாக தனது முடிவை அறிவித்திருந்தார். தற்போது அதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேநேரத்தில், அரசியலில் இருந்து முழுமையாக விலகப்போவதில்லை என்றும், தொடர்ந்து மக்கள் நலப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பேன் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. 2028 தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன.

📍 Tamilnadu
📰 Smacy News
🕒 3 days ago

Related News

நாட்டின மாடு வளர்க்கும் 5,000 பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!
நாட்டின மாடு வளர்க்கும் 5,000 பெண்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நெல்லையை தலைமையிடமாக கொண்டு "இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை"
நெல்லையை தலைமையிடமாக கொண்டு "இளைய புரட்சி தலைவி திரிஷா பேரவை"
⬅ Back
➕ Post Ad
To Ads ➡